அன்றாடம் அரங்கேறும் ஆணவக்கொலைகள்... தனிச்சட்டம் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்
தஞ்சாவூர்: சாதி ஆணவ படுகொலையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Recommended Video
கும்பகோணத்தில் சாதி ஆணவ படுகொலையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் தமிழக முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக காந்தி பூங்கா முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச்செயலாளர் சின்னை பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், நீலப்புலிகள் இயக்கம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய குடியரசு கட்சி, மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, தலித் கிறிஸ்துவ நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவக் படுகொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச் சிறப்பு சட்டம் இயற்றக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன், மண்டல செயலாளர் விவேகானந்தன், தொகுதி செயலாளர் முல்லைவளவன், கருத்தியல் பரப்புரை மாநில செயலாளர் அரசாங்கம், திராவிட கழக மாவட்ட தலைவர் நிம்மதி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சுரேஷ், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் விஜய் ஆனந்த், அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் சசிகுமார், வழக்கறிஞர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications