அரசியல் என்ன என்டர்டெய்ன்மென்டா.. அவங்களுக்கு கிளாஸ் எடுங்கப்பா – தவெகவை கலாய்த்த உதயநிதி
தஞ்சாவூர்: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதுநாள் வரை தவெக குறித்தும், விஜய் குறித்தும் வாய் திக்காமல் இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அவர் மீது அடுத்தடுத்து விமர்சனங்களை வைத்து வருகிறார். தஞ்சையில் நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில், கொள்கை கோட்பாடு இல்லாமல் ஒரு கூட்டம் சுற்றி கொண்டிருக்கிறது என தவெக வை உதயநிதி சாடியுள்ளார் [Udhayanidhi Trolls TVK].
திமுக டெல்டா மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூரில் இன்று மாலை நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். திரண்டிருந்த பிரம்மாண்ட கூட்டத்தில், உதயநிதி ரேம்பில் நடந்து என்ட்ரி கொடுத்தார். கூட்டத்தில் பேசிய உதயநிதி, "இளைஞர்கள், மகளிர் யார் பக்கம் என்று கேட்கிறார்கள். அவர்கள் எங்கள் பக்கம் தான். திமுக இளைஞரணியில் 5 லட்சம் நிர்வாகிகள் உள்ளனர்.

டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் போர்
50 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இளைஞர்களாகிய உங்களால் தான் திமுக 76 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போடுகிறது. ஆட்சியிலும், கட்சியிலும் பல முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இளைஞரணியில் இருந்தவர்கள் தான். பல ஒன்றிய செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எல்லாம் இளைஞரணியில் பயிற்சி பெற்றவர்கள் தான்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாட்டின் முதலமைச்சரும் இளைஞரணியில் இருந்து சென்றவர் என்பது நமக்கு பெருமை. நாம் மகளிர் உரிமைத் தொகை கொடுப்பது பாசிச சக்திகளுக்கு பிடிக்கவில்லை. அதை நிறுத்த பார்க்கிறார்கள். டெல்லிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கும் போர் தான் வருகிற சட்டமன்ற தேர்தல். அண்ணா தன் தம்பிகளின் துணையுடன் உருவாக்கிய திமுக எனும் பேரியக்கத்தின் பிரதிநிதிகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்.
தவெக மீது விமர்சனம்
தமிழ்நாட்டின் உரிமைக் குரலை, எந்நாளும் ஓங்கி ஒலிப்போம். யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றிக் கொண்டிருக்கிறது. வெறும் சத்தம் மட்டும்தான் வருகிறது. லட்சியம், கொள்கை, கோட்பாடு இல்லாமல் ஒரு கூட்டம் சுற்றுகிறது. இதுவெல்லாம் என்னவென்றே தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றுகிறது. அரசியல் என்றால் ஏதோ என்டர்டெய்ன்மென்ட் என்று நினைக்கிறார்கள்.
அரசியல் என்பது அர்ப்பணிப்பு
இது என்டர்டெய்ன்மென்ட் இல்லை என்று அந்த இளைஞர்களிடம் நீங்கள் சொல்ல வேண்டும். அரசியல் பணி என்பது அர்ப்பணிப்பு.. அது மக்கள் பணிகள் மீதான ஈடுபாடு என்பதை நீங்கள் உணர்த்த வேண்டும். அதை நாம் நிரூபித்தும் காட்ட வேண்டும். அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இல்லாதவர்களை வைத்துக் கொண்டு யாராலும், எதுவும் சாதிக்க முடியாது. பாசிஸ்ட்களையும், பழைய, புதிய அடிமைகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு இங்குள்ள இளைஞர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது" என்றார்.
-
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications