விஜயா? உதயநிதியா? யாருக்கு சப்போர்ட்.. நடிகை வனிதா வைத்த ட்விஸ்ட்.. அந்த பதில் இருக்கே.. அடடா செம
தஞ்சாவூர்: அரசியல் கட்சியை விஜய் தொடங்கி உள்ளதற்கு நடிகை வனிதா வாழ்த்து தெரிவித்தார். இந்த வேளையில் சினிமாத்துறையில் இருந்து அரசியலில் உதயநிதி மற்றும் விஜய் நுழைந்துள்ளனர். இவர்களின் யாருக்கு உங்களின் சப்போர்ட் என்ற கேள்விக்கு நடிகை வனிதா சொன்ன பதில் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா. இவர் நடிகையாக இருந்து தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். ‛மிசஸ் & மிஸ்டர் ' எனும் திரைப்படத்தை அவர் இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. மிசஸ் & மிஸ்டர் திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.
விஜயக்குமார் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை கிராமத்தில் இருந்து தான் வாழ்க்கையை தொடங்கினார். இருப்பினும் முதல் முறையாக தஞ்சாவூர் பெரியக்கோவிலுக்கு இன்று நடிகை வனிதா சென்றார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் மற்றும் உதயநிதி பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.
பத்திரிகையாளர் ஒருவர் நடிகை வனிதாவிடம், ‛‛அரசியலுக்கு விஜய் புதிதாக வந்துள்ளார். அவர் எந்த அளவுக்கு சோபிப்பார்?'' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு வனிதா, ‛‛நான் விஜயை வாழ்த்துகிறேன். அரசியல் எனும் மிகப்பெரிய பரிமாணத்தை அவர் எடுத்துள்ளார். நான் எனது ஆழ்மனதில் இருந்து விஜய்க்கு வாழ்த்து சொல்கிறேன். கண்டிப்பாக அவர் பெரிய வெற்றி அடைய வேண்டும்'' என்றார்.
அதன்பிறகு பத்திரிகையாளர், ‛‛நீங்கள் சினிமா துறையில் உள்ளீர்கள். உதயநிதியும், விஜய்யும் சினிமாத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால் 2 பேரும் அரசியல் எதிரி என்று பேசுகிறார்களே?'' என்ற வினவினார். அதற்கு வனிதா, ‛‛அரசியல் என்ற வகையில் எல்லாமே சரி. 2 பேரும் நண்பர்கள் தான்'' என்றார். இதையடுத்து ‛‛அரசியலில் இருவரில் யாருக்கு சப்போர்ட்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வனிதா, ‛‛நல்ல தமிழகம் அமைய யார் வந்தால் நான் சப்போர்ட் செய்வேன்'' என்று கூறி சென்றார்.
முன்னதாக நடிகர் விஜய் கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்தனர். அந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார். அப்போது பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி திமுகனரை ஊழல் கபடதாரிகள் என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு திமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியினரை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் விஜயின் பெயரை சொல்லாமல் மறைமுகமாக விமர்சனம் செய்தனர்.
குறிப்பாக விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‛‛எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, திமுகவுக்கே வெற்றி. 2026 சட்டசபை தேர்தலில் எந்தக் கூட்டணி அமைந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும்'' என்று கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி












Click it and Unblock the Notifications