Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசுப் பள்ளியில் சேர்ந்தா 5 ஆயிரம் போனஸ்.. அசத்திய ஒரத்தநாடு கிராம மக்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காக கிராம மக்கள் சார்பில் கல்வி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளையினர் முதலாம் வகுப்பில் புதிதாக வருகை தந்த அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கியுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் போர்டு, ஸ்மார்ட் கிளாஸ், ஆங்கிலப் பயிற்சி, இலவச காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, 7.5 சதவீத ஒதுக்கீடு என பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Orathanadu Government schools

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் உள்ள சிறப்பம்சங்கள், அதிக மதிப்பெண்கள், அரசு வழங்கும் நலத்திட்டங்கள், அரசுப் பள்ளியில் படித்தால் உள்ள நன்மைகள் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரத்தநாடு அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காக கிராம மக்கள் சார்பில் புதிதாக சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அசத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள சேதுராயன் குடிகாடு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடக்கப் பள்ளியில் 37 மாணவர்களும், உயர்நிலைப் பள்ளியில் 127 மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகில் தனியார் நர்சரி பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 60 இல் இருந்து 37 ஆக குறைந்தது.

இந்நிலையில், இந்த இரண்டு அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சேதுராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டுவாழ் இளைஞர்கள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டது. இதன் மூலம் சேதுராயன் குடிக்காடு பள்ளி வளர்ச்சி குழு அறக்கட்டளையினர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, கட்டட வசதி, ஸ்மார்ட் போர்டுகள், பள்ளிக்குத் தேவையான நாற்காலி, மேசை, நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி அசத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், முதலாம் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, இப்பள்ளியில் புதிதாக சேர்ந்த ஐந்து சிறுவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய், 4 ஆம் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவருக்கு ரூ. 5 ஆயிரம், 6 வகுப்பில் சேர்ந்த 13 மாணவர்களுக்கு தலா ரூ. 3000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும், கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற 42 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த பத்து மாணவர்களுக்கு 6 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும், தேர்ச்சி பெற்ற 32 மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசாக ரூ. 500 என மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காக அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதுபோன்ற ஊக்கத்தொகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என சேதுராயன் குடிக்காடு கிராம‌ மக்கள் சார்பில் கல்வி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+