மொட்டை தலை.. நல்ல குடி.. தொடை தெரிய கார் மீது ஏறி கெட்ட ஆட்டம்.. அமமுகவுக்கு நேரமே சரியில்லையே!
பிரச்சார வாகனத்தில் குத்தாட்டம் போட்ட வேட்பாளர் மகன் வீடியோ வைரலாகிறது.
Recommended Video

தஞ்சை: அமமுகவுக்கு நேரம் சரியில்லை போல! ஒவ்வொருத்தர் மானமும் காற்றில் ரொம்ப வேகமாக பறந்து வர ஆரம்பித்துள்ளது. மொட்டை தலை, வெள்ளை வேட்டி-சட்டை சகிதம் அக்கட்சியின் வேட்பாளர் மகன் போட்ட குத்தாட்டம்தான் இப்போது வைரலோ வைரல்!
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அமமுக சார்பாக ரங்கசாமி போட்டியிடுகிறார். இவருக்கு மனோ பாரத், வினோ பாரத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகனான மனோ பாரத்தான் இப்படி ஒரு குத்தாட்டத்தை போட்டுள்ளார். நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடித்திருக்கிறார். ஃபுல்போதை தலைக்கேறி உள்ளது. தண்ணி அடித்தோமா, வீட்டில் போய் குப்புற படுத்து தூங்கினோமான்னு இல்லாம, ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். அதுவும் பிரச்சார வாகனம் மீது ஏறி நின்று கொண்டு!
ஆடிக் கொண்டே இருந்தவர் திடீரென ராஜ்கிரண்போல வேட்டியை ரொம்ப உயரத்தில் தூக்கி கட்டுகிறார். பிறகு குத்தாட்டம் ஸ்பீடு எடுக்கிறது. அவர் ஏறி நின்று ஆடி கொண்டிருக்கும் வேனில் ஜெயலலிதா உருவம் பொறித்த அமமுக கொடியும் உள்ளது. இந்த வீடியோதான் தமிழகம் முழுவதும் உள்ள சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
வேட்பாளரின் மகன் குடிபோதையில் குத்தாட்டம் போட்ட வீடியோவினால் தஞ்சை தினகரன் ஆதரவாளர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். தினகரனுக்கு இருக்கிற தலைவலியில் இப்போ இதுவும் ஒன்னு! இவங்களை எல்லாம் வெச்சிக்கிட்டு என்னத்த செய்ய போறாரா தெரியவில்லை!












Click it and Unblock the Notifications