அம்மாப்பேட்டை ரேவதி.. அவரது கணவர் இளஞ்செழியன்.. நடுவே புகுந்த இளவழகன்.. கடைசியில் ஒரு கொலை!

கள்ளக்காதலுக்காக கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கள்ளக்காதலுக்காக கணவனை கொன்ற மனைவி- வீடியோ

    தஞ்சை: கள்ளக்காதல் படுத்தும் பாடு யார் யாரை எங்கு கொண்டு போய் நிறுத்தப் போகிறதோ தெரியவில்லை. கணவனை கொன்று மூட்டை கட்டி சாக்கடையில் வீசிய மனைவியை ஒரு வருஷம் கழித்து போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

    மதுரை மாவட்டம் மாரண வாரியங்கள் கிராமத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் ஒரு கட்டிட தொழிலாளி. கட்டிட வேலையாக தஞ்சாவூர் அம்மாப்பேட்டைக்கு சென்றிருந்தபோது, ரேவதி என்ற பெண்ணை சந்தித்தார்.

    அவரை மிகவும் பிடித்துபோகவும் தன் காதலை சொல்ல, ரேவதியும் அதற்கு சம்மதித்தார். இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்து கொள்ளவில்லை. அதனால் இருவரும் வீட்டை மீறி 2012-ல் கல்யாணம் செய்து கொண்டனர்.

    கண்டித்தார்

    கண்டித்தார்

    இந்நிலையில் இளஞ்செழியனின் நண்பர் இளவழகன் என்பவர் மீது ரேவதிக்கு ஆசை வந்துவிட்டது. இதனால் இருவரின் கள்ளக்காதலும் வேகமாக வளர்ந்தது. இதனை கண்டுபிடித்த கணவன், மனைவியை கூப்பிட்டு பலமுறை கண்டித்தார். ஆனால் கள்ளக்காதல் ஜோடி இதனை மதிக்கவே இல்லை.

    கணவனை கொன்றார்

    கணவனை கொன்றார்

    மேலும் தங்களின் கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த இளஞ்செழியனைக் கொல்ல இருவரும் முடிவு செய்தனர். இதற்காக நண்பர்கள் துணைக்கு வைத்து கொண்டு, கடந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி அம்மாபேட்டையில் உள்ள ஸ்ரீதர் என்பவரது வீட்டில் கொலை செய்தனர்.

    சாக்குமூட்டை

    சாக்குமூட்டை

    பிறகு அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி, மணி என்பவர் ஆட்டோவில் கொண்டுவந்து ஏழுப்பட்டி அருகே இருந்த சாக்கடை ஒன்றில் திணித்துவிட்டு சென்றுவிட்டனர். இதனிடையே மகனை காணவில்லை என்று இளஞ்செழியனின் அம்மா தங்கம்மாள் அம்மாபேட்டை போலீசில் புகார் தந்தார்.

    ஆட்கொணர்வு மனு

    ஆட்கொணர்வு மனு

    மேலும் இது சம்பந்தமாக ஆட்கொணர்வு ஒன்றினை மதுரை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கு துரிதமானது. ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அப்போதுதான் இந்த கொலை விவரம் போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து, ரேவதி, கள்ளக்காதலன் இளவழகன், ஆட்டோ டிரைவர் மணி, இளவழகனின் நண்பர் கலியபெருமாள் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    எலும்புக்கூடு

    எலும்புக்கூடு

    வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் சொன்ன சாக்கடையில் சென்று போலீசார் பார்த்தபோது, உடம்பு எலும்பு கூடாக இருந்தது. கொலை செய்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், அந்த எலும்புக்கூட்டை கைப்பற்றி தொடர் விசாரணை நடந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+