Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த மனசுதான் சார்.. ஏடிஎம்மில் கொட்டிய பணத்துடன் எஸ்கேப்! சிசிடிவியால் சிக்கிய இளைஞரை மன்னித்த பெண்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஏடிஎம்-இல் ஏற்பட்ட பழுது காரணமாக ரூ.20000 பணத்தை இழந்த பெண் அதை எடுத்துச் சென்ற இளைஞரின் எதிர்காலத்தை கருதி அவரை மன்னித்துவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டது இந்தியன் வங்கி. இந்த வங்கியை ஒட்டி இருக்கும் ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் இயந்திரம் மற்றும் பணம் டெபாசிட் செய்யும் சிடிஎம் இயந்திரங்கள் உள்ளன. இதில் ஒரு இயந்திரம் அடிக்கடி பழுதாகி வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அதிராம்பட்டினத்தை சேர்ந்த நாதிரா மர்யம் என்பவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.

Woman forgave youth who took her Rs 20000 cash in an Indian Bank ATM

இவர் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் ரூ.20,000 எடுக்க முயற்சித்து உள்ளார். ஆனால் பணம் வராததால் அருகில் இருந்த பணம் எடுக்கும் இயந்திரத்தில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்திருக்கிறார். முன்பு 20 ஆயிரம் ரூபாய் எடுக்க முயற்சித்த இயந்திரத்தில் பணம் வருகிறதா என்பதை பார்ப்பதற்காக ஏடிஎம் மையத்திலேயே அவர் காத்திருந்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு நபர்கள் அந்த இயந்திரத்தில் பணம் எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் இயந்திர கோளாறு காரணமாக அவர்களுக்கும் பணம் வரவில்லை.

15 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த பிறகு ஏடிஎம் மையத்தை விட்டு அந்த பெண்மணி புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர் எடுக்க முயற்சித்த 20 ஆயிரம் ரூபாய் பணம் வெளியே வந்துள்ளது. அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த மஞ்சள் சட்டை அணிந்த மர்ம நபர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அந்த பெண்மணி பணத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

இது தொடர்பாக வங்கி கிளையில் புகார் அளித்த பின்னர் அவர்கள் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். ஏடிஎம் சிசிடிவி கேமராவில் கொட்டிய பணத்தை அந்த நபர் எடுத்து சென்றது தெளிவாக பதிவாகியுள்ளது. அந்தக் காட்சியில், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் கொட்டியதை பார்த்த மஞ்சள் சட்டை அணிந்த இளைஞர் அவசர அவசரமாக பணத்தை எடுத்துக் கொண்டு தனது நண்பருடன் அங்கிருந்து புறப்பட்டு செல்வது தெரிகிறது.

பணத்தை எடுத்து தப்பி சென்ற மர்ம நபர்கள் இருவரும் பைக்கில் செல்லும் சிசிடிவி காட்சியும் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு பணத்தை எடுத்துச் சென்ற இளைஞரின் பார்வைக்கும் சென்றுள்ளது. இதனை கண்டு பதறிப்போன இளைஞர் காவல் நிலையத்துக்கே வந்துவிட்டார். எடுத்த பணத்தை வங்கி மேலாளர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையில் போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பெண் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரவில்லை.

மாறாக எந்த இளைஞரின் எதிர்காலம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சிசிடிவி வீடியோ மற்றும் அவரது புகைப்படத்தை நீக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளார். தனது பணத்தை எடுத்துக்கொண்டு 10 நாட்கள் தராமல் வைத்திருந்தவர் என்று கூட பாராமல், மனித நேயத்துடன் அந்த இளைஞர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லாமல் மன்னித்து விட்டுள்ள அந்த பெண்மணியின் நல்ல உள்ளம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+