பெற்ற மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர தாய்...10 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
பெற்ற மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர தாய்...10 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்க்கு போக்சோ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் போக்சோ நீதிமன்றத்தில் விடுதலைச் செய்யப்பட்டவர்களுக்கும் உயர் நீதிமன்றம் 7 முதல் 10 ஆண்டு தண்டனை கொடுத்துள்ளது.
மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்
சென்னையைச் சேர்ந்தவர் வசந்தி. இவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார். இவர் பணம் சம்பாதிக்கும் ஆசையில் 15 வயதான சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். சிறுமியை கட்டாயப்படுத்தி, மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். பல கட்டங்களில் பலர், அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
ஆந்திராவுக்கு தப்பி ஓடிய சிறுமி
இதனால் அந்தக்கொடுமையிலிருந்து தப்பிக்க தாயின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி, திருப்பதி சென்றுள்ளார். யாரையும் தெரியாத நிலையில் அங்கு பழம் விற்கும் மூதாட்டியிடம் தஞ்சமடைந்துள்ளார். மூதாட்டியிடம் புதிய வரவாக சிறுமி இருப்பதை கண்டு சிறுமி மீது சந்தேகம் கொண்ட ஆந்திரா போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
சிறுமியை மீட்ட ஆந்திர போலீஸார்
அப்போது சிறுமி தனது தாயாரால் தான் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதை தெரிவித்து அழுதுள்ளார். அவரை மீட்டு சென்னை அனுப்பி வைத்த போலீஸார், சென்னை காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சென்னை திரும்பிய சிறுமியிடம் விசாரணை நடத்திய போலீஸார் சிறுமியிடம் புகாரை பெற்றுள்ளனர்.

சிறுமியின் புகார் சிக்கிய குற்றவாளிகள்
தாயின் துணையுடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் தாய் வசந்தி உள்பட 10 பேருக்கு எதிராக விபச்சார தடுப்பு சட்டம், போக்ஸோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தாய்க்கு 10 ஆண்டு சிறைவிதித்த நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், சிறுமியின் தாய் வசந்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதேபோல இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் இருவருக்கு தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. மீதமுள்ளவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

போக்சோ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாய் மேல் முறையீடு
போக்சோ நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அடையாளம் காட்டியுள்ளார் என்பதால், குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, சிறுமியின் தாய் உள்ளிட்ட மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
விடுதலை ஆனவர்களுக்கும் தண்டனை
மற்ற 9 பேரில் இருவர் இறந்துவிட்டதால் மீதமுள்ள 7 பேருக்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து நீதிபதி வேல் முருகன் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications