1500க்கு விற்பனையான ஒரு பெட்டி தக்காளி.. இன்று ஒரேடியாக கடுமையாக வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை
தேனி: 1500க்கு விற்பனையான ஒரு பெட்டி தக்காளி, 450 ரூபாய் ஆக குறைந்து கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் தேனி மாவட்டம் போடி பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மே மற்றும் ஜூன் மாதம் ஏற்பட்ட பருவ நிலை மாறுபாடு காரணமாக தக்காளி விலை நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வரலாற்றில் இல்லாத அளவிற்கு தக்காளி விலை ஜூன் மாதம் அதிகரிக்க தொடங்கியது. தங்கம் போல் தக்காளி விலை ஏறியது. தக்காளி விலை ஏற தொடங்கிய ஒரு வாரத்திலேயே சதம் அடித்தது. கிலோவுக்கு 180 ரூபாய் முதல் 200 வரை உயர்ந்தது.

தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்து கொண்டே சென்றது.தக்காளி விலை இரண்டு மாதங்கள் உயர்ந்த நிலையில் இருந்தது. இதனால் தக்காளியை ஒரு கிலோ, 2 கிலோ என்று வாங்கி வந்த வேளையில், 100 கிராம், 200 கிராம் என்று தக்காளியை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.இதனால் ரேஷன் கடைகளில் தக்காளி மானிய விலையில் விற்கப்பட்டது. தக்காளி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து தக்காளியை பலரும் இறக்குமதி செய்தார்கள். ஒரு வழியாக தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக படிப்படியாக குறைந்துள்ளது.
தக்காளி விலை கிலோ 120 ரூபாய் என்கிற அளவில் இருந்த நிலையில் தற்போது கிலோ 60 ரூபாய் என்கிற அளவில் தமிழகத்தின் பல பகுதிகளில் குறைந்துள்ளது. தக்காளி விலை தற்போது முதல் ரகம் 50 ரூபாய் என்கிற அளவில் உள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை அதிரடியாக குறைந்துள்ளதால், மற்ற பகுதிகளிலும் விரைவில் தக்காளி விலை மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பலரும் தக்காளியை தற்போது கிலோ கணக்கில் வாங்கி வைத்து வருகிறார்கள். அடுத்த வாரம் கிலோ ரூ. 30 வரையிலும் தக்காளி விலை குறையும் என கூறப்படுகிறது. இதனிடையே விலை அதிகமாக விற்பதால், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் தற்போது கவலை அடைந்துள்ளனர். தக்காளி விலை கடுமையாக குறைந்துவிடுமோ என்று அச்சம் அடைந்துள்ளனர்.
1500க்கு விற்பனையான ஒரு பெட்டி தக்காளி, 450 ரூபாய் ஆக குறைந்து கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் தேனி மாவட்டம் போடி பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி விலை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications