தேனி கம்பம் மெட்டு சாலையில் நின்றிருந்த காரில் 3 சடலங்கள்.. வாயில் நுரை தள்ளிய நிலையில் இறப்பு
தேனி: தேனி கம்பம் மெட்டு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இன்று காலை 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் என்ற விவரங்களை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் மூவரும் எப்படி இறந்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலையில் ஓடை பகுதியில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்வையிட்ட போது அந்த காரில் 3 பேர் இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கம்பம் வடக்கு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை சோதனை செய்ததில் அங்கு 3 பேர் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனே கார் கதவுகளை உடைத்து அந்த 3 சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அந்த கார் கேரள பதிவு பெண் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் கேரளாவில் இருந்து எங்கு செல்வதற்காக வந்தனர். அல்லது எங்கிருந்து வந்தனர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் வாயிலும் நுரை தள்ளியுள்ளதால் ஏதாவது மருந்து குடித்துவிட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.
காரின் அருகே மருந்து பாட்டில் இருந்ததை தடயவியல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். காரின் முன் பகுதியிலேயே மூவரும் அமர்ந்திருந்த நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களது பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் முழு விவரம் தெரியவரும். மேலும் அவர்கள் யார் என்ற விவரங்கள் தெரிந்தால்தான் அவர்கள் எதற்காக இறந்தனர் என்பது குறித்தும் தெரியும்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications