தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு போய் விட்டு திரும்பிய தம்பதி.. திடீரென வந்த பஸ்ஸால் துயரம்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு போய்விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த 37 வயதாகும் நல்லதம்பி ஆட்டோ ஒட்டுநர் ஆவார். இவரது மனைவி ரம்யா (30). நல்ல தம்பி ரம்யா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

A couple who returned from Theni Veerapandi Goumariamman temple died in an accident

இந்த நிலையில் செவ்வாய்கிழமை அன்று தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் நல்லதம்பியின்து உறவினர்கள் தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு நல்லதம்பியும், அவரது மனைவியும் கம்பத்தில் இருந்து வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு தங்களது ஆட்டோவில் சென்றனர். அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் நேற்று அதிகாலையில் நல்லதம்பியும், அவரது மனைவியும் கம்பம் நோக்கி தங்களது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை நல்லதம்பி ஓட்டினார். இந்நிலையில் காலை 6 மணியளவில் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி தனியார் பள்ளி அருகே வந்த ஆட்டோ வந்தது. அப்போத கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும், நல்ல தம்பி ஓட்டிவந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதின.

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த நல்லதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி ரம்யா படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பஸ்சில் இருந்த பயணிகள் லேசான காயங்கள் ஏற்படட்து.

இதுகுறித்து தகவலறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நல்லதம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் கம்பத்தில் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ரம்யாவை அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீஸ் அரசு பஸ் டிரைவர் முருகனை கைது செய்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு வரும்போது தம்பதி உயிரிழந்த சம்பவம் தேனி கம்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+