"அமெரிக்காவில் ஒரு கறவை மாடு, ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்குது".. எடப்பாடி பழனிசாமி பேச்சு
தேனி: "அமெரிக்காவில் ஒரு கறவை மாடு, ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்குது" என்று எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தேனியில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேற்று தேனி நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும் போது, "அமெரிக்காவில் ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு ஒன்றே கால் லட்சம் லிட்டர் பால் கறவை மாட்டில் இருந்து கறக்கிறார்கள்.. அங்கு ஒரு கறவை மாடு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது.. நமது தேனி மாவட்டத்தில் விவசாய தொழிலாளிகள், மற்றும் விவசாயிகள், கறவை மாடு வைத்து பால் கறந்து, இதனை கூட்டுறவு சங்கங்கங்களுக்கு வழங்கி உப வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..

எப்படி அமெரிக்காவில் கால்நடை பண்ணையில் அதிக பால் தரும் மாடுகள் இருக்கிறதோ, அது போன்ற பசுக்களை நம்முடைய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணி, சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோட்டில் ஆயிரம் கோடியில், ஆயிரம் ஏக்கரில் கால் நடைபூங்காவை ஏற்படுத்தி வைத்துள்ளேன்.. இந்த ஆட்சியாளர் ஸ்டாலின், இந்த கட்டிடம் கட்டி இரண்டு வருடம் ஆகிவிட்டது. திறக்க மாட்டேங்கிறார்.. 1000 கோடியில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா.. இந்த ஆட்சியாளர்கள் திறக்காமல் மூடி வைத்திருக்கிறார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரும். அந்த கால்நடை பூங்காவை நாங்கள் திறப்போம்.
திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை 40 சதவீதம் அதிகமாகிவிட்டது. கொள்ளுக்கும், எள்ளுக்கும் வித்தியாசம் தெரியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். பச்சைப்பொய் பேசும் பச்சைத் துண்டு பழனிசாமி என்று ஸ்டாலின் என்னை பேசுகிறார். ஸ்டாலின் தான் பச்சைப் பொய் பேசி நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வராக தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.
விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகளை நாங்கள் செய்திருக்கிறோம். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம். எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எங்களது அ.தி.மு.க. அரசு பாதுகாப்பு கொடுத்தது. 5 லட்சம் முதியோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கொடுத்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பல முதியோர்களுக்கு உதவித்தொகையை நிறுத்தி விட்டது" இவ்வாறு கூறினார்.
-
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
செங்கோட்டையன் பாணியில் களமிறங்கிய சிவி சண்முகம்.. திடீரென எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பது ஏன்? -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்?












Click it and Unblock the Notifications