கும்மிருட்டு ராஜலட்சுமி.. உளவு பார்த்த ‘மூன்றாம் கண்’! பெண்ணுக்கு பெண்ணே..அசிங்கம் பிடித்த தனலட்சுமி
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தனது வீட்டில் உடை மாற்றிய பெண்ணை, ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்த கும்பல், அதனை காட்டி தகாத உறவுக்கு அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சியாக ஒரு பெண்ணே அந்த வீடியோவை எடுத்த தனது உறவினர்களுக்கு அனுப்பிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போதைய நவீன யுகத்தில் எங்கு சென்றாலும் கவனமுடன் இருக்க வேண்டி இருக்கிறது. சிசிடிவி கேமராக்களுக்கு குற்றவாளிகள் தான் அஞ்சவேண்டும். ஆனால் மூன்றாம் கண்களாக மாறிப்போன செல்போன்களுக்கு அனைவருமே நிச்சயம் அஞ்சித் தான் இருக்க வேண்டும் போல..

அந்த அளவுக்கு செல்போன்கள் நம் வாழ்வில் ஆக்கிரமித்து இருக்கிறது. குறிப்பாக உடைமாற்றும் அறைகள், கழிவறை, ஏன் சொந்த வீட்டில் கூட பெண்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வோடு தான் இருக்க வேண்டும் என்பது போல ஆகிவிட்டது.
அந்தளவுக்கு இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்ணுக்கு பெண்ணே எதிரி போல பல்வேறு அதிர்ச்சி சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தேனியில் அரங்கேறி இருக்கிறது. தனது வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு கும்பல் வீடியோ எடுத்து அவரை தகாத உறவுக்கு அழைத்திருக்கிறது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அந்த வீடியோவை எடுத்து தனது உறவினர்களுக்கு கொடுத்ததே ஒரு பெண் தான் என்ற பகீர் தகவலும் வெளியாகி இருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் பால்சாமி வேலைக்கு செல்லும் நேரங்களில் ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜலட்சுமிக்கும் அதே பகுதியில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தனலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் இருவருக்கும் இடையே சில நாட்களில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனது வீட்டில் ராஜலட்சுமி உடைமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ராஜலட்சுமி உடைமாற்றும் போது ஆபாசமாக வீடியோ எடுத்து வர வேண்டும் என தனலட்சுமிக்கு சொல்லி இருக்கிறார். இதை அடுத்து தனலட்சுமி ஆனந்தராஜின் செல்போனை வாங்கி ராஜலட்சுமி குளிக்கும் போதும், உடைமாற்றும் போதும் ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் செல்போனில் இருந்த வீடியோக்களை ஆனந்தராஜின் தம்பியான 28 வயதே ஆன சின்னச்சாமி பார்த்திருக்கிறார். இதை அடுத்து ராஜலட்சுமி வீட்டுக்குச் சென்ற சின்னச்சாமி அவர் உடைமாற்றும் வீடியோவை காட்டி தன்னுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி நடந்ததை கணவரிடம் கூறி பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதை அடுத்து ஆபாசமாக படம் எடுத்த தனலட்சுமி, படம் எடுக்கத் தூண்டிய ஆனந்தராஜ், புகைப்படங்களையும் வீடியோக்களையும் காட்டி மிரட்டி தகாத உறவுக்கு அழைத்த சின்னச்சாமி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது போல பக்கத்து வீட்டுப் பெண்ணை நம்பி வீட்டுக்குள் விட அவர் ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை உறவினர்களுக்கு பகிர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications