ஓ பன்னீர்செல்வம் கலங்கி போயிடுவாரே.. அவரது மகன் ஓபி ரவீந்திரநாத் போட்ட பரபரப்பு பதிவு
தேனி: தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் குறித்து அவரது மகன் ஓபி ரவீந்திரநாத் போட்ட பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், அதன்பின்னர் பல சட்ட போராட்டம் நடத்தினார். ஆனால் இதுவரை அவருக்கு சாதகமாக எதுவுமே நடைபெறவில்லை.. இந்த சூழலில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதேபோல் அவருடன் சேர்ந்து கூட்டணியில் போட்டியிட்ட டிடிவி தினகரனும் தேனியில் தோற்றுப்போனார்.

ஓ பன்னீர்செல்வம் அதன் பின்னர் தற்போது அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்.. அவருடன் இருந்த பலர் தற்போது அவரை விட்டு விலகி விட்டனர். இந்நிலையில் தந்தையர் தினமான நேற்று, தனது அப்பா ஓ பன்னீர்செல்வம் குறித்து தேனி தொகுதி முன்னாள் எம்பி ஓபி ரவீந்திரநாத் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "அப்பா, நம்பிக்கை துரோகத்தினால் பட்ட எத்தனையோ சரிவுகளுக்குப் பிறகும், தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை...!
பிள்ளைகளின் முகத்தில் புன்னகையை காண, தன் முகத்துக்கு பின்னால் சோகத்தை மறைத்து குடும்பத்திற்காக தனது முழு வாழ்வை அர்ப்பணித்து கொண்டிருக்கும் தந்தையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த தந்தையர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்..

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், அப்பாவின் மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பது மகிழ்ச்சி.அவர் இனிமேலும் அசிங்கப்படாமல் ஓய்வு காலத்தை மகிழ்வோடு கழிக்க முடிவு செய்யவும்.அவர் ஒவ்வொருமுறை அசிங்கப் படும்போதும் சிரிக்கிறார் தமிழராக நாங்கள் வேதனைப் படுகிறோம் என்று கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், உங்க அப்பா இந்த அளவுக்கு சங்கட பட காரணம் நீங்கள் தான் என்பதை முதலில் உணர வேண்டும், ஒரே மகனை டெல்லிக்கு மகனாக அனுப்பி வைத்தார், ஆனால் உங்களால் கட்சி சார்பில் எந்த நன்மையும் அவருக்கு இல்லை, யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு இல்லை, எல்லாம் துயரம் என்று கூறியுள்ளார்.
இதேபோல் இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "சீக்கிரம் பாஜகவில் அல்லது திமுகவில் சேர்ந்து ஏதாவது பதவி வாங்க பாருங்கள். எவ்வளவு நாட்கள் தான் அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கப் போகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications