தேனி அருகே பைக்கில் கூடவே வந்த எமன்.. இளைஞரின் முன்பு சீறிய பாம்பு.. இப்படியா ஆகணும்?
தேனி: பாம்புகளை பொறுத்தவரை எப்படி வேண்டுமானாலும் வந்துவிடும். காடுகள் அதிகம் உள்ள பகுதிளை ஒட்டி வசிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்றுள்ளார். அவரது பைக்கில் பாம்பு ஒன்று பதுங்கியுள்ளது. நண்பனின் கையில் பாம்பு ஏறிய போது, அவர் என்னவென்று தெரியாமல் உதறியுள்ளார். அப்போது ஹரிஷ் கையை கடித்துவிட்டது. எமனாக மாறிய பாம்பு பற்றி பார்ப்போம்.
நம்மூரில் உள்ள பாம்புகளில் பொதுவாக நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன், கருநாகம் ஆகிய பாம்புகளே ஆபத்தானவை ஆகும். இந்த பாம்புகள் மனிதர்களுக்கு எப்போதுமே எமனாக மாறிவிடக்கூடியவை ஆகும். இந்த பாம்புகள் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. தேனிமாவட்டம் கம்பம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காடுகளில் பாம்புகள் அதிகமாக உள்ளன.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பழைய ரைஸ் மில் தெருவில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஹரிஷ்க்கு 20 வயது ஆகிறது. இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில், இளைஞர் ஹரிஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கடைக்கு செல்வதற்காக சென்றிருக்கிறார்.. அப்பொழுது இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு நண்பரின் கையில் ஏறியிருக்கிறது. அதனால் பதறிப்போன நண்பர் கையை உதறியுள்ளார். அப்போது அந்த பாம்பு பின்னால் அமர்ந்திருந்த ஹரிஷ் கையில் விழுந்தது. பாம்பு கையில் விழுந்த வேகத்தில் ஹரிஷின் கையில் கடித்துள்ளது.
பாம்பு கடித்ததால் சுதாரித்துக் கொண்ட ஹரிஷ் நண்பர், மற்றும் ஹரிஷ் இருவரும் உடனே இருசக்கர வாகனத்திலேயே கம்பம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு ஹரிஷுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பாம்பின் விஷம் உடலில் தீவிரமாக பரவி உள்ளதால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள். இதையடுத்து ஹரிஷை கொண்டு செல்ல முடிவு செய்து தயாராகினார்கள்.ஆனால் அதற்குள் ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு கடித்ததில் இளைஞர் உயிரிழந்ததாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஹரிஷின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
கம்பம் பகுதியல் இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து 20 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சுருளிப்பட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கம்பம் அடுத்த சுருளிப்பட்டி பகுதியினை பொறுத்தவரை காடுகள் நிறைந்த பகுதியாகும்.. பாம்புகள் கண்ட இடங்களில் சுற்றும்.. எனவே அந்த பகுதியில் உள்ளவர்கள் இரவில் வெளியில் செல்லும் போதும், வாகனத்தை எடுக்கும் போதும்,நன்றாக தட்டிவிட்டு வாகனத்தை எடுப்பது நல்லது..
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications