Exclusive: எடப்பாடியால் என்னை எதுவும் செய்யமுடியாது! சீறும் சசிகலா ஆதரவு தேனி மாவட்ட அதிமுக செயலாளர்
தேனி: அதிமுகவில் சசிகலாவை இணைக்கும் வரை தாங்கள் ஓயமாட்டோம் என சூளுரைத்துள்ளார் அக்கட்சியின் தேனி மாவட்டச் செயலாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிழல் என வர்ணிக்கப்படுபவருமான சையது கான்.
சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என தாம் தீர்மானம் நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமியால் தன்னை எதுவும் செய்ய முடியாது எனவும் சீறியிருக்கிறார்.
நல்லது நடக்கும் என ஓ.பி.எஸ். தங்களிடம் தெரிவித்திருப்பதால் சசிகலா விரைவில் அதிமுகவில் இணையக்கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒன் இந்தியா தமிழிடம் சிறப்புப் பேட்டி மூலம் தேனி மாவட்ட அதிமுகச் செயலாளர் எஸ்.பி.எம்.சையது கான் பகிர்ந்த தகவல் பின்வருமாறு;

சிறப்புப் பேட்டி
''சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது தனிப்பட்ட முறையில் நான் ஒருவன் எடுத்த முடிவல்ல. தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் தழுவிய அளவில் அதிமுகவில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகளின் விருப்பமும் அது தான். கடந்த 3 நாட்களாக எனக்கு தொலைபேசியில் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தேனியை போல் இன்னும் இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் சசிகலா, டிடிவியை அதிமுகவில் இணைக்க விரும்புகிறார்கள்.''

ஆதாயம் யாருக்கு
''இந்த சூழலில் ஆதாயம்தேடிகள் என்றும் பழைய எஜமானர்களை கொண்டு வர துடிக்கிறார்கள் எனவும் ஆதிராஜாராம் பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இன்னும் சொல்லப்போனால் சசிகலாவால் ஆதாயம் அடைந்தது யார்?, நாங்களா அடைந்தோம்?, ஓ.பன்னீர்செல்வமா கடந்த 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தார்?. அவரை பதவியை விட்டு விலகச் சொன்னதே சின்னம்மா தான். எடப்பாடி பழனிசாமி தான் சசிகலாவால் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஆதாயம் அடைந்தார்.''

நல்லது நடக்கும்
சசிகலாவை இணைக்கக் கோரி நீங்கள் முன்னெடுக்கும் நிகழ்வுகளை பார்த்து உங்களை கட்சியில் இருந்து நீக்கினால் என்ன செய்வீர்கள் என நாம் இடையே கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர், ''இரண்டு பேரும் சேர்ந்த்து எடுத்தால் தான் அது நடவடிக்கை. ஒருவர் மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு பெயர் நடவடிக்கை அல்ல. இதனால் எடப்பாடி பழனிசாமியால் ஒன்றும் செய்துவிட முடியாது. தேனி மாவட்ட நிர்வாகிகள் எங்கள் தரப்பு கருத்தை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்திருக்கிறோம், அவர் நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.''

திணிக்கக்கூடாது
''சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். எங்கள் இலக்கை அடையும் வரை எங்களிடம் இருந்து இந்த குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். தொண்டர்கள் விருப்பத்திற்கேற்ப தான் நாம் முடிவெடுக்க வேண்டுமே தவிர, நமது முடிவை தொண்டர்களிடம் திணிக்கக்கூடாது. என்னை தொலைபேசியில் அழைப்பவர்கள் எல்லாம் இதற்கான பாராட்டி வருகிறார்கள்.'' எனக் கூறினார் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.எம்.சையது கான்.

சையது கான்
சையது கானை பொறுத்தவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிழல் என வர்ணிக்கப்படுபவர். தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.சுடன் ஒன்றாக ஒரே காரில் பயணிக்கக்கூடியவர். இந்தச் சூழலில் அவர் சசிகலா விவகாரத்தில் ஒரு முடிவெடுத்திருக்கிறார் என்றால் அதன் பின்னணியில் ஓ.பி.எஸ். இருக்கக்கூடும் எனக் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications