எப்ப பார்த்தாலும் சீனியர்.. சீனியருங்ற.. யார் சீனியர்? தேனியில் ஓபிஎஸ்-க்கு எதிராக இபிஎஸ் ஆவேசம்!
தேனி: அதிமுகவில் சீனியர் என உரிமை கோருகிற ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னரே எம்.எல்.ஏ., எம்பி பதவி வகித்தது நான்தான்.. ஜெயலலிதாவுக்கு எதிராக போடி தொகுதியில் வேலை பார்த்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்று மிக கடுமையாக விமர்சித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தேனியில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இங்கே ஒருத்தர் இருக்கிறாரு. அவரு யாருன்னு உங்களுக்கு தெரியும்.. அவர் பத்திரிகையில ஒன்னு வெளியிட்டிருக்கிறார்.. எடப்பாடி.. எடப்பாடி பழனிசாமின்னு கூட சொல்லலை.. ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் யாரும் ஏறமாட்டார்கள்.

இதற்கு சில விளக்கங்களை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஜெயலலிதா இறந்த போது இவருக்கு (ஓபிஎஸ்-க்கு) முதல்வர் வாய்ப்பு துரதிருஷ்டவசமாக கிடைக்கவில்லை. இவருக்கு பதவி கிடைக்கலை என்ற உடன் தர்மயுத்தம் செய்தார். இவருக்கு (ஓபிஎஸ்-க்கு) பதவி கிடைக்கவில்லை எனில் எந்த எல்லைக் கோட்டுக்கும் செல்வார்.
பிறகு ஒருவழியாக, என்னை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆளுநர் உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது, எதிர்த்து ஓட்டுப் போட்டவர் இவர்தான் (ஓபிஎஸ்). அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும்; டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்த்து ஓட்டுப் போட்டவர் இந்த மனிதர். அன்று அதிமுக ஆட்சியை வீழ்த்த திமுகவுக்கு துணை நின்றவர் இந்த மண்ணில் பிறந்தவர் (ஓபிஎஸ்). நானா துரோகம் செய்தேன்?

இரட்டை இலையை முடக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்தார். அதிமுக தொண்டர்களின் சொத்து அதிமுக தலைமைக் கழகம். அந்த சொத்தை ரவுடிகளை கூப்பிட்டுப் போய் அடித்து நொறுக்கி திமுககாரர்கள் மூலம் சீல் வைத்தீர்களே... அது துரோகம் இல்லையா?

எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம்.. எங்களை விட்டுப் போகாதீங்க என்று.. நீங்களாக போனதற்கு எங்க மேல பழிசுமத்தி பிரயோஜனம் இல்லை.. எப்ப பார்த்தாலும் ஜெயலலிதாவுக்கு விசுவாசம் என்கிற நீங்கள் (ஓபிஎஸ்) 1989-ல் இதே தேனி மாவட்டத்தில் போடியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது நீங்க வெண்ணிற ஆடை நிர்மலாவுக்குதானே வேர்லை செய்தீங்க? அந்த தேர்தலில் எடப்பாடியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.
புரட்சித்தலைவி அம்மாவுக்கு எதிராக தேர்தலில் வேலை செய்தவர்தான் ஓபிஎஸ்
— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) March 2, 2025
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்கள் #தேனியில்_எடப்பாடியார் pic.twitter.com/5PUTeZ8eJa
எப்ப பார்த்தாலும் சீனியர், சீனியருங்ற.. நீங்க 2001-ல் தான் எம்.எல்.ஏ. நான் 1989-லேயே எம்.எல்.ஏ. 1991-ல் சேலம் மாவட்ட செயலாளர். 1991-லும் எம்.எல்.ஏ. வாரியத் தலைவர்.. 1998-ல் நான் கேட்காமலேயே எம்பி சீட் கொடுத்தாங்க ஜெயலலிதா. அப்ப எம்.பி.யானேன்.. ஆக உங்களுக்கு 11 ஆண்டுக்கு முன்னரே வந்தது நான்.. ஆனால் உங்களுக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது; ஏற்றுக் கொண்டோமே.. உங்கள் பின் நின்றோம்.. ஆனால் பதவி இல்லை என்கிற போது யாரையுமே ஏற்கவில்லையே.. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications