Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘முதல் வெற்றி வாக்கு'.. பேஸ்புக்கில் தேனி ராணுவ வீரர் செய்த செயல்.. கலெக்டர் கடும் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி அருகே ராணுவ வீரர் தான் செலுத்திய தபால் வாக்கினை பேஸ்புக்கில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையானது.. இந்த விவகாரத்தில் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய தேனி கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷஜீவனா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தேனி லோக்சபா தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்குப்பதிவுக்கு தேவையான பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. அதன்படி தபால் வாக்கு சீட்டு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கப்பட்டு வாக்குப்பதிவும் நடந்து வருகிறது.

Army soldier s vote shared on social media in Theni case filed against 2 people

கடந்த ஏப்ரல் 11-ந்தேதி சிலமலை பகுதியைச் சேர்ந்த விக்கி தேவன் என்ற நபர் தனது 'பேஸ்புக்' பக்கத்தில் 'முதல் வெற்றி வாக்கு' என்ற தலைப்பில் தபால்வாக்கு பதிவு செய்த புகைப்படத்தினை பகிர்ந்து உள்ளார். அதேபோல் குமணன்தொழு பகுதியை சேர்ந்த சிவமாயன் என்ற நபரும் தபால்வாக்கு செலுத்திய வாக்குச்சீட்டு புகைப்படத்தை 'பேஸ்புக்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி, ஓட்டுப் பதிவுசெய்து, புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களான 'வாட்ஸ்-அப்' மற்றும் 'பேஸ்புக்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைத்தளங்களில் தெரியப்படுத்துவதும், அல்லது வேறு எந்தவகையிலும் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை தெரியப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் குற்றமாகும்.

எனவே சமூக வலைத்தளங்களில் தபால்வாக்கு சீட்டினை பகிர்ந்த 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், தபால்வாக்கு சீட்டினை புகைப்படம் எடுத்து அனுப்பிய நபர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஜனநாயக மாண்பை சீர்குலைக்கும்படி நடந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தேனி தொகுதி 'அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு செலுத்திய தபால் வாக்குச்சீட்டை மேற்கண்ட ராணுவ வீரர் புகைப்படம் எடுத்த நண்பருக்கு அனுப்பி உள்ளார். அதை ராணுவ வீரருடைய நண்பர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+