வாழைத்தோப்புக்குள் நுழைந்த செல்வி.. அதைவிடுங்க.. "அது" பக்கத்திலே உட்கார்ந்து.. பகீரை கிளப்பிய தாத்தா
தேனி: தாத்தாவுக்கு 62 வயசாகுது.. ஆனாலும் இவ்வளவு கோபமும், வன்மமும் ஆகாது.. இப்போது கைதாகி ஜெயிலுக்குள்ளே உட்கார்ந்துள்ளார்..!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது டி.கள்ளிப்பட்டி.. இங்குள்ள வாசுகி அம்மையார் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வி.. 45 வயதாகிறது..

கூலித்தொழிலாளி: பெருமாள் ஒரு கூலித்தொழிலாளி.. செல்வி தன் வீட்டிலேயே ஆடுகளை வளர்த்து வருகிறார்.. இதனால் ஆடுகளுக்கு தினந்தோறும் புல் அறுக்க சென்று வருவது வழக்கம்.. அப்படித்தான் நேற்றும் காலையில் கிளம்பி போனார். ஆனால், சாயங்காலம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை..
இதனால் அவரது குடும்பத்தினர் பதறிப்போனார்கள்.. செல்வியை எங்கெங்கோ தேடி பார்த்தனர்.. இறுதியில், ஒரு வாழைத் தோட்டத்தில் பிணமாக பார்த்து கதறி துடித்தனர்.. இதையடுத்து, உடனடியாக அல்லி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாழைத்தோட்டம் : போலீசாரும் செல்வியின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அப்போதுதான் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால், உடலில் வெட்டுக்காயங்களும் இருந்தன.. நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்டாலும், வடப்புதுப்பட்டி அழகர் கோவில் செல்லும் சாலையில் உள்ள இந்த வாழைத்தோட்டத்துக்கு செல்வி எப்படி வந்தார் என்ற குழப்பமும் அதிகரித்தது..
அதனால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.. அப்போதுதான், சருத்துப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இருளப்பன் என்பவரது பெயர் அடிபட்டது. இவருக்கு 62 வயதாகிறது.. இவரிடம்தான் செல்வி அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.. இதனையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர்... திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்து, அவரை பிடித்து விசாரணையும்.. அப்போதுதான் நடந்த உண்மையை ஒப்புக்கொண்டார்.
கள்ளக்காதலி: செல்வி இவரது கள்ளக்காதலியாம்.. பல ஆண்டுகளாகவே கள்ளத்தொடர்பு இவர்களுக்குள் இருந்து வந்திருக்கிறது.. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருளப்பனுக்கு உடம்பு சரியில்லாமல் போயுள்ளது.. கடைசியில் காசநோய் தொற்றும் ஏற்பட்டுள்ளது.. இதன்காரணமாக, இருளப்பனிடம் செல்வி பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.. இது இருளப்பனுக்கு ஆத்திரத்தை தந்து வந்திருக்கிறது.
நேற்று புல் அறுக்க செல்வி சென்றபோது, பின்னாடியே சென்றாராம் இருளப்பன்.. அவரிடம் நைசாக பேசி உல்லாசத்துக்கு வருமாறு அழைத்திருக்கிறார்.. பிறகு, செல்வியை அழைத்து கொண்டு, வாழைத்தோப்புக்குள் நுழைய முயன்றுள்ளார்.. ஆனால், செல்வி தோப்புக்குள் வர மறுத்தாராம்.. இதனால் ஆத்திரமடைந்து, கீழே கிடந்த கட்டையால் அடித்து கொன்றுள்ளார் இருளப்பன்..
ஆனால் நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக, செல்வியின் சடலத்தில் இருந்து நகைகளை கழட்டி எடுத்து கொண்டு, வெளியூர் தப்பி செல்ல நினைத்திருக்கிறார்.. அப்போதுதான் போலீசில் சிக்கி உள்ளார்..
புல் அறுக்கும் பெண்: இதையெல்லாம் போலீசில் வாக்குமூலமாகவே இருளப்பன் சொல்லி உள்ளார். இதையடுத்து, இருளப்பனை கைது செய்து, உள்ளே தூக்கி வைத்துள்ளனர் போலீசார். செல்வியுடன் அடிக்கடி புல் அறுப்பதற்காக, கூடவே போவாராம் இருளப்பன்.. இது செல்வியின் கணவர் பெருமாளுக்கு பிடிக்கவில்லை.. அதனால், செல்வியை கண்டித்து வந்ததாக தெரிகிறது.. சம்பவத்தன்றுகூட, இருளப்பனுடன்தான் செல்வி, சென்றிருக்க வேண்டும் என்று போலீசில் துப்பு தந்ததே பெருமாள்தானாம்.

தாலிக்கயிறு: செல்வியின் சடலத்தை பார்த்தபோதே, பின்தலையில் நிறைய வெட்டு காயங்கள் இருந்ததால், கொலை என்றே நம்பப்பட்டது.. ஆனால், செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த மஞ்சள் தாலிக்கயிறு அதே இடத்தில் அறுந்து கிடந்திருக்கிறது.. அதில் கோர்க்கப்பட்டிருந்த தங்க குழாய்கள், தாலி, காதில் அணிந்து இருந்த 2 கிராம் தங்கத்தோடு போன்றவைகள் மாயமாகிய நிலையில்தான், பெருமாள் சிக்கி உள்ளார்.. சடலத்தின் காது, கழுத்தில் இருந்து ஒவ்வொன்றாக பிரித்து திருடி, மாயமாகியிருக்கிறார், |
காசநோய் இருப்பதற்காக கள்ளக்காதலி, தன்னை தவிர்ப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லையாம். அதனாலேயே கொலையை செய்ததாக சொல்கிறார் 62 வயது தாத்தா..!!












Click it and Unblock the Notifications