தேனியில் 500 ஆண்டுகள் பழமையான கன்னட மொழி கல்வெட்டு.. கோயில் நிலவறையிலிருந்து கண்டெடுத்த ஆய்வாளர்கள்!
தேனி: தேனி மாவட்டத்தில் விநாயகர் கோயில் ஒன்றில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கன்னட மொழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டை பல்வேறு மன்னர்கள், பல்வேறு காலங்களில் ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். இதற்கான சான்றுகள் அவ்வப்போது கிடைக்கப்பெறுகின்றன. அகழாய்வு மூலம் சில குறிப்பிட்ட இடங்களில் இதற்கான சான்றுகள் கிடைத்தாலும், பெரும்பாலான நேரங்களில் மக்கள் நிலங்களை தோண்டும்போது கல்வெட்டுகளும், சிலைகளும், நாணயங்களும் கிடைப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல கோயில்களின் நிலவறைகளிலும் இதுபோன்ற தொல் பொருட்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படுகின்றன.

அப்படியாகத்தான், தேனி மாவட்டத்தின் சில்வார்பட்டியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் 500 ஆண்டுகள் பழமையான கன்னட மொழி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் நிலவறையை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு தலைமையிலான ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இக்கல், 3 அடி உயரம், 2.5 அடி அகலம், அரை அடி தடிமன் அளவில் உள்ளது. இது, அங்குள்ள சுவருடன் வைத்து பூசப்பட்டிருக்கிறது.
இக்கல்லின் மேற்பகுதியில் சிவலிங்கம், சூரியன், சந்திரன் கோட்டுருவங்களாக வெட்டப்பட்டுள்ளன. அவற்றின் கீழே 'ஸ்ரீஹாலபையா கவுடா கிராம வேல்பரார பட்டா' என கல்வெட்டு எழுதப்பட்டிருக்கிறது. இதனை தொல்லியல் ஆய்வாளர்கள் நுார்சாகிபுரம் சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுனர் முருகேசபாண்டியன், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில் இந்த கல்வெட்டு 500 ஆண்டுகளுக்கு முந்ததையது என்பதை உறுதி செய்தனர்.
இதில் எழுதியுள்ளதை மொழி பெயர்த்த ஆய்வாளர்கள், ஸ்ரீஹாலபையா கவுடாவின் ஆளுமைக்குள் உள்ள கிராமம் இது என்றும், இக்கிராமத்தின் எல்லைக்கல்தான் இந்த கல்வெட்டு எனவும் கூறியுள்ளனர். 16ம் நூற்றாண்டில் இப்பகுதி ஸ்ரீஹாலபையா கவுடா எனும் குறுநில மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. இவர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கர்நாடகாவில் இருந்து சில்வார்பட்டி பகுதியில் குடியேறியவராக இருக்கலாம் என்றும் கல்வெட்டு உணர்த்துகிறது. இவருடன் குடியேறிய மக்கள் இக்கோயிலை புனரமைத்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அதற்கான சான்றாக இக்கல்வெட்டு இருக்கிறது.
மட்டுமல்லாது கோயிலின் சில சிற்பங்களும் இந்த கல்வெட்டின் காலத்தை ஒத்து இருக்கின்றன. கோயில் இந்த குறுநில மன்னர் காலத்தில் புனரமைக்கப்பட்டிருக்கிறது என்பதை இதன் மூலம் உறுதி செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கல்வெட்டை தொடர்ந்து, அருகில் இருக்கும் கோயில்களிலும் இதே காலத்தை சேர்ந்த கல்வெட்டு ஏதேனும் கிடைக்கின்றதா? என்று ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications