சம்போ சிவ சம்போ! காதலுக்கு கார் கொடுத்து உதவிய உடன்பிறப்பு! அம்போவென நின்ற ஸ்கார்ப்பியோ கார் எரிப்பு
தேனி : தேனி மாவட்டம் சின்னமனூரில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிக்கு உதவிக்கு வந்த திமுக பிரமுகரின் காரை காவல்நிலையம் முன்பே தீ வைத்து எரித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள தேரடி தெருவை சேர்ந்தவர் பாண்டி என்பவரது மகளான மல்லிகா. படித்து முடித்து விட்டு வீட்டிலேயே தாய்க்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மல்லிகாவுக்கும் மல்லிகாவின் தாய் மாமன் ஈஸ்வரனின் மகனான தினேஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

காதல் ஜோடி
கடந்த எட்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் பல இடங்களில் சுற்றி திரிந்து காதலை வளர்த்து வந்துள்ளனர். இதுகுறித்து பல நாட்கள் இருவரது வீட்டுக்கும் தெரியாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகாவின் வீட்டுக்கு தெரிய வந்தது. உறவினர்களாகவே இருந்தாலும் இருவரது காதலையும் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. எவ்வளவோ எடுத்துக் கூறியும் திருமணம் செய்து வைக்க அவர்கள் மறுத்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

திடீர் திருமணம்
இதையடுத்து திமுக பிரமுகர் மல்லிகாவின் உறவினருமான சந்திரசேகர் என்பவர் தனது காரில் மல்லிகாவையும் தினேஷ் குமாரையும் அழைத்துச் சென்று தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் காதலர்களை பெற்றோர் பிரித்து விடுவார்கள் என பயந்ததால் இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

பேச்சுவார்த்தை
இரு வீட்டாரின் சம்மதம் இல்லாததால் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சின்னமனூர் காவல் நிலைய போலீசார் பெற்றோரை வரவழைத்ததோடு காதல் ஜோடியையும் வரவழைத்துள்ளனர். காதல் ஜோடி வந்தவுடன் சந்திரசேகர் தனது காரை காவல் நிலையத்தில் வெளியே நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தைக்காக காவல் நிலையம் சென்றுள்ளார். காவல் நிலையத்திற்கு உள்ளே இரு வீட்டாரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

கார் எரிப்பு
அப்போது அங்கு வந்த மல்லிகாவின் அண்ணனான பெருமாள் என்பவர் தனது சகோதரி மற்றும் தனது சகோதரியின் கணவர் வந்த காரை திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். கரும்புகையுடன் கார் தீ பற்றி எரிந்த நிலையில் அருகில் இருந்தோர் இதுகுறித்து சின்னமனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இ இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சின்னமனூர் காவல்துறையினர் காரை எரித்த பெருமாளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications