தேனியில் விருந்துக்கு வந்த வீட்டில் வெக்கை.. ஃபேன் மேலேயே உட்கார்ந்த விருந்தாளி.. அடுத்து நடந்தது?
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஒரு கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்து வீட்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. அந்த பாம்பு நாகப்பாம்பு ஆகும். விறுவிறுவென்று விருந்தாளி போல் சென்ற அந்த நாகப்பாம்பு, தன்னை யாரும் தாக்கி விடுவார்களோ என்று பயந்து பதுங்கி கொண்டது. அப்படி பதுங்கி கொண்ட பாம்பை எப்படி கண்டுபிடித்து மீட்டார்கள் என்பதை பார்ப்போம்.
இந்த செய்தியை பார்க்கும் முன்பு நாகப்பாம்பு பற்றி பார்ப்போம். நமது நாட்டில் அதிக நஞ்சுள்ள பாம்புகளின் லிஸ்டில் நாகப்பாம்பு இருக்கும். இந்த பாம்பு நாஜா என்ற வகையில் எலாப்பிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். நாகப்பாம்புகள் பொதுவாக வெப்பமண்டல, பாலைவனப் பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன. நமது ஊரில் இதை நல்ல பாம்பு என்று அழைப்பது வழக்கம்.

நாகப்பாம்பு கடித்தால் என்னாகும்: பொதுவாக நாகப்பாம்பு கடித்தால் மனிதர்கள் இறந்துவிடுவார்கள். நாகப்பாம்பின் நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும். கடிபட்டவருக்கு பெருங்களைப்பும், அடக்க முடியாத தூக்கமும் ஏற்படும். பின்பு மூச்சடைக்கும். தலை சுற்றுதல், வாந்தி எடுத்தல், உடல் குளிர்தல், இதய செயல்பாடு படிப்படியாக குறைதல் போன்றவை ஏற்படும்.இறுதியில் கடிபட்டவர் இறந்து போவார். எனவே நாகப்பாம்பு கடித்தால், அதன் விஷம் இரத்தத்தில் கலந்து விடாமல் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள்.
நாகப்பாம்பு கடித்தால் என்னாகும்: பொதுவாக நாகப்பாம்பு கடித்தால் மனிதர்கள் இறந்துவிடுவார்கள். நாகப்பாம்பின் நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும். கடிபட்டவருக்கு பெருங்களைப்பும், அடக்க முடியாத தூக்கமும் ஏற்படும். பின்பு மூச்சடைக்கும். தலை சுற்றுதல், வாந்தி எடுத்தல், உடல் குளிர்தல், இதய செயல்பாடு படிப்டியாக குறைதல் போன்றவை ஏற்படும்.இறுதியில் கடிபட்டவர் இறந்து போவார். எனவே நாகப்பாம்பு கடித்தால், அதன் விஷம் இரத்தத்தில் கலந்து விடாமல் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள்.
நாகப்பாம்பு எங்கு வாழும்: நாகப்பாம்பு பொதுவாக கற்களுக்கு அடியில், இடிபாடுகளுக்கிடையில் வாழக்கூடிய தன்மையுடையது. சில சமயம் வீட்டுக்குள்ளும் புகுந்து விடும். அப்படித்தான் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஒரு கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்து வீட்டிற்குள் புகுந்தது. பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரம் கண்மாய்கரை பகுதியில் முகமது என்பவரின் தோட்டத்து வீடு இருக்கிறது.
வீட்டிற்குள் நல்ல பாம்பு: அந்த வீட்டில், விவசாயத்துக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 11ம் தேதி அந்த வீட்டுக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். மேலும் தேனியை சேர்ந்த பாம்பு பிடிப்பவரான கண்ணனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஃபேன் மேல் தொங்கிய பாம்பு: இதைத்தொடர்ந்து பாம்புப்பிடி வீரர் கண்ணன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை தேடினார். அப்போது நாகப்பாம்பு ஒன்று, வீட்டின் மேற்கூரையில் ஏறி மின்விசிறி அருகே புகுந்து இருப்பதை கண்டார். அந்த பாம்பு தன்னை தாக்கிவிடுவார்களோ என்று பயந்து படம் எடுத்து சீறியபடி தொங்கியது. அதனை, பாம்புப்பிடி வீரர் கண்ணன் லாவகமாக பிடித்தார். அந்த நாகப்பாம்பு சுமார் 6 அடி நீளம் இருந்தது. பின்னர் அந்த நாகப்பாம்பை வனத்துறையினர் சோத்துப்பாறை அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். தோட்டத்தில் வீட்டில் நாகப்பாம்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications