நடுரோடு.. ஃபுல் மப்பு.. பிரியாணி பொட்டலம்.. பெரிய மனுஷன் மாதிரி இருக்கீங்களே.. இப்படி செய்யலாமா!
நடுரோட்டில் போதையில் நபர்கள் சாப்பிட்டு உள்ளனர்
Recommended Video
தேனி: ஃபுல் போதை.. நடுரோடு.. ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து கொண்டு 2 பேர் அலப்பறை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இவர்கள் 2 பேரும் யார் என்று தெரியவில்லை. தேனி தேவதானிப்பட்டியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்கிறார்கள். எப்படியும் இவர்களுக்கு 45 வயசுக்கு மேலதான் இருக்கும்.

பட்டப்பகலிலேயே அளவுக்கு அதிகமாக தண்ணி அடித்து இருக்கிறார்கள். அப்படியே கடைக்கு போய் ஒரு பிரியாணி பொட்டலத்தையும் வாங்கி வந்து, தேனி - திண்டுக்கல் ஹைவேஸ் நடுவே உட்கார்ந்து விட்டனர்.
நெடுஞ்சாலையில் வெள்ளைக் கோடு இருக்குமே.. அங்குதான் துண்டை விரித்து எதிரெதிரே பார்த்த மாதிரி உட்கார்ந்து கொண்டனர். ரோட்டிற்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் பெரிய பெரிய லாரி, பஸ் போய் கொண்டிருக்கிறது.
வாங்கி வந்ததோ ஒரே ஒரு பிரியாணி பொட்டலம்தான். அதை நடுவே வைத்து கொண்டு ஆளுக்கு ஒருவராக தங்கள் பக்கம் இழுத்து கொண்டு சாப்பிடுகிறார்கள். அதுவும் கையில் அள்ளி சாப்பிட முடியாத அளவுக்கு போதை தென்படுகிறது.
பக்கத்தில் போய் கொண்டிருந்த வாகனங்களை பற்றியோ, பஸ், லாரி நம்ம மேல ஏறிவிடுமே என்ற பயமோ கொஞ்சம்கூட இவர்களிடம் காணப்படவில்லை. ஆனால் இதை பார்த்தவர்களுக்கு ஆத்திரமும், கோபமுமாக வந்தது.
இதை அந்த பக்கம் சென்றவர்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். அப்படியே இந்த வீடியோவை பதிவிடாமல், விஸ்வாசம், பேட்ட போன்ற படங்களின் ஆர்.ஆர். சேர்த்து குழைத்து.. சோஷியல் மீடியாவில் போட்டுள்ளனர்.
இதை பார்த்து பொதுமக்களும் கொதிப்படைந்து உள்ளனர். நடுரோட்டில் ரகளை செய்த இவர்கள், தேவதானப்பட்டியை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும் ஏன் இன்னும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications