மதுரை- போடி மின்சார ரயில் சேவை ஆரம்பம்.. சென்னை-போடிநாயக்கனூர் ரயில் நேரம் மாற்றம்.. தேனி ஹேப்பி
தேனி: போடி-மதுரை இடையே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டதால், கடந்த 2023-ம் ஆண்டு மதுரை-போடி இடையே ரயில் சேவைகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து மின்மயமாக்கல் பணிகள் நடந்து வந்தது. அந்த பணிகளும் முடிந்ததால், போடி-மதுரை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை போடிநாயக்கனூர் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
போடி-மதுரை இடையே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டிருந்தது. இதனை அகல ரயில்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. ஆனால் ரயில் பாதை அமைக்க பல ஆண்டுகளாக தாமதம் ஆனது.. மக்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள். கடைசியில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கடந்த 2019 ம் ஆண்டுக்கு பின் பணிகள் வேகம் எடுத்தது. இறுதியாக 2021, 2022 ம் ஆண்டு பணிகள் வேகமாக நடந்தன. இறுதியாக அகல ரயில் பாதை அமைக்கும் பணி தேனி மதுரை இடையே வெற்றிகரமாக முடிந்தது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு மதுரையில் இருந்து தேனிக்கு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அதன் பிறகு போடி வரை பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு மதுரை-போடி இடையே பயணிகள் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மதுரையில் இருந்து சேலம் காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரல் வரை சென்று வந்த மதுரை அதிவிரைவு ரயில், போடிநாயக்கனூர் சென்னை இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையாக மாற்றப்பட்டது. தற்போது மதுரை-போடி இடையே தினசரி ரயிலும், போடி-சென்னை இடையே வாரம் 3 நாட்கள் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் என்ஜின்கள் மூலம் இந்த ரயில்கள் தற்போது வரை இயக்கப்பட்டு வந்தன.
சோதனை ஓட்டம்: இதையடுத்து இந்த ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தது. அண்மையில் மதுரையில் இருந்து போடி வரை மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு இந்த ரயில் பாதையில் மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. இதன் தொடர்ச்சியாக அகல ரயில் பாதையில் மின்சார ரயில் சேவை நேற்று தொடங்கியது. சென்னையில் இருந்து போடிக்கு வரும் ரயில், மதுரை வரை மின்சார ரயிலாகவும், மதுரையில் இருந்து போடிக்கு டீசல் என்ஜின் ரயிலாகவும் இயக்கப்பட்டு வந்தது. அந்த ரயில் நேற்று போடி வரை மின்சார ரயிலாக வந்தடைந்தது.
மின்சார ரயில் சேவை: இதேபோல் மதுரையில் இருந்து போடிக்கு வரும் தினசரி பயணிகள் ரயிலும், மின்சார என்ஜின் மூலம் நேற்று காலை வந்தது. இந்த ரயில் பாதையில் மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டதால், பயண நேரம் குறையும் என்பதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவது குறையும் என்பதால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் மதுரை வரை வரும் ரயில்களை இனி எளிதாக போடிநாயக்கனூர் வரை இயக்க முடியும்.
வைகை ரயில்: மேலும் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சென்னை போடிநாயக்கனூர் இடையே மதுரை திண்டுக்கல் இடையே நேரடி ரயில் சேவையும், போடிநாயக்கனூர் கோவை இடையே நேரடி ரயில் சேவையும், போடிநாயக்கனூர்- கன்னியாகுமரி ரயில் சேவையும் இயக்க முடியும். அதற்கு ரயில்வே முன்வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை போடிநாயக்கனூரில் இருந்து தினசரி இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை-போடிநாயக்கனூர் ரயில் நேரம் மாற்றம்: போடி-மதுரை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டதை தொடர்ந்து ரயில் இயக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னை-போடி ரயில் காலை 8.55 மணிக்கு தேனிக்கு வந்து கொண்டிருந்தது. இனி அந்த ரயில் தேனிக்கு காலை 8.28 மணிக்கு வந்தடையும். இதுதொடர்பாக சென்னை-போடி, மதுரை-போடி ரயில்களுக்கான புதிய நேர அட்டவணையை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, சென்னை-போடி ரயில் காலை 7.54 மணிக்கு உசிலம்பட்டியை வந்தடையும். ஆண்டிப்பட்டிக்கு 8.13 மணிக்கும், தேனிக்கு 8.28 மணிக்கும், போடிக்கு 9.10 மணிக்கும் வந்தடையும். இதேபோல் போடியில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு, தேனிக்கு 9.03 மணிக்கும், ஆண்டிப்பட்டிக்கு 9.18 மணிக்கும் வந்தடையும். உசிலம்பட்டிக்கு 9.38 மணிக்கும், மதுரைக்கு 10.40 மணிக்கும் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை-போடி பயணிகள் ரயில் நேரம் மாற்றம்: மதுரை-போடி பயணிகள் ரயில் மதுரையில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, உசிலம்பட்டிக்கு 8.54-க்கும், ஆண்டிப்பட்டிக்கு 9.14-க்கும், தேனிக்கு 9.28-க்கும் வந்தடையும். பின்னர் அங்கிருந்து போடிக்கு செல்லும் இந்த ரயில், போடியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50-க்கு மதுரையை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications