செம காமெடி.. கடைசியில் "அம்மா" வீட்டில் தங்கி ஓட்டு வேட்டையாடும் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
Recommended Video

தேனி: தேனியில் ஒரு காமெடியாக, ஜெயலலிதா தங்கிய வீட்டில் தங்கித்தான் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஓட்டு வேட்டையாடி வருகிறாராம்.
தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேனியில் வீடு பிடித்து தங்கியுள்ளார். இந்த வீட்டில் தங்கித்தான் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
இதில் என்ன விசேஷம் என்று கேட்கலாம். இந்த வீடுதான் விசேஷம். காரணம் இதன் பின்னணியில் ஒரு சின்ன வரலாறு அடங்கியுள்ளது.

என்ஆர்டி நகர்
என்.ஆர்.டி.நகரில் உள்ள சிங்கப்பூர் பங்களாவில் ஈ.வி.கே.எஸ்.குடியேறியுள்ளார். இந்த வீட்டில் தான் 2002-ல் மறைந்த ஜெயலலிதா தங்கியிருந்தார். பின்னர் 2006- சட்டமன்றத் தேர்தலின் போதும் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா சிங்கப்பூர் பங்களாவில் தான் ஓய்வெடுத்தார்.

அம்மா பங்களா
ஜெயலலிதா தங்கியிருந்ததற்கு பின்னர் சிங்கப்பூர் பங்களாவை அம்மா பங்களா என தேனி நகர மக்கள் அழைக்கத் தொடங்கினர். தற்போது அந்த அம்மா பங்களாவில் தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் குடியேறியுள்ளார்.

ப்ரீயாகவே விட்ட ஓனர்
பங்களாவிற்கு சொந்தக்காரரான பாரதி சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளில் தொழில் செய்து வருபவர். மிளகு, ஏலக்காய் என வாசனை பொருட்கள் ஏற்றுமதி தொழில் செய்து வரும் பாரதி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாடகையின்றி வீட்டை தங்குவதற்கு அளித்துள்ளார்.

பெரிய ஆள் போல
இதற்கு ஓ.பி.எஸ்.தரப்பில் முட்டுக்கட்டை போட்டார்களா என நாம் விசாரித்ததில், யாரையும் அவ்வளவு எளிதாக நம்பாத ஜெயலலிதாவே தங்கியிருந்தார் என்றால், அப்ப பாரதியின் தொடர்புகள் எந்தளவுக்கு இருக்கும் என யோசித்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள் தேனிக்காரர்கள்.

எல்லா வசதியும் உண்டாம்
எல்.இ.டி.தொலைக்காட்சி, ஏ.சி., பிரிட்ஜ், சோபா செட், வாஷிங்மெஷின் என அத்தனை பொருட்களும் வீட்டில் எப்போதும் இருக்குமாம். இதனால் இளங்கோவனுக்கு செலவு மிச்சம் என சொல்கின்றனர் உள்ளூர்க்காரர்கள். எது எப்படியோ கடைசியில் அம்மா வீட்டில் தங்கி இளங்கோவன் வாக்குக் கேட்க செல்கிறார்.
என்னவோ போங்கப்பா.. !
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications