வாங்க சார், வாங்க மேடம்... பரோட்டா 1 ரூபாய்.. பிரியாணி 10 ரூபாய்.. திக்குமுக்காடிய கூட்டம்
தேனி: ஜவுளிக் கடை, உணவகங்கள், செல்போன் கடை போன்றவைகள் புதியதாக திறக்கப்படும் போது, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில், புதிய ஜவுளிக்கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக புதிய உத்தியை கையாண்ட ஜவுளிக்கடையினர், முதலில் வரும் 599 பேருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை வழங்குவதாக அறிவித்தனர். இதனால், அப்பகுதியே கூட்டத்தால் திக்குமுக்காடியது.

அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு பரோட்டாவும், பத்து ரூபாய்க்கு பிரியாணியும் வழங்கியதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பெரியகுளம் பவளம் தியேட்டர் அருகே புதிதாக அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று திறப்பு விழா சலுகையாக ஒரு பரோட்டா ஒரு ரூபாய்க்கும், பிரியாணி 10 ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அந்தக் கடையில் குவியத் தொடங்கினர். பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு குவியும் கூட்டம், போல் இருந்தது. கட்டைகளால் தடுப்புகள் கட்டப்பட்டு இருந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications