மதுரை டூ தேனி.. தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து.. வெளியில் குதித்த டிரைவர்.. நடந்த பயங்கரம்
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 30 பயணிகளுடன் மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது வெளியே குதித்த ஓட்டுநர் தங்கபாண்டியன் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
தேனி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் பொதுவாகவே மின்னல் வேகத்தில் செல்லும். 75 கிமீ தூரம் உள்ள தேனி மதுரையை அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் சர்வ சாதாரணமாக 1.30 மணி நேரத்தில் சென்றுவிடும். இதனால் அவ்வப்போது பேருந்துகள் 90 கிமீ வேகத்தில் கூட செல்கின்றன.

தேனியில் வண்டியை எடுத்தால், அடுத்து ஆண்டிபட்டியிலும், அதற்கு அடுத்தபடியாக உசிலம்பட்டியிலும், கடைசியில் செக்கணூரணியில் தான் நிற்கும். வேறு எங்குமே பெரும்பாலும் வாகனங்கள் நிற்காது.
மதுரையில் இருந்து தேனி செல்லும் வழியிலும் இதேபோல் தான்வாகனங்கள் நிற்கும். உசிலம்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி இடையே தான் வாகனங்கள் மிக அதிக வேகத்தில் செல்வது அடிக்கடி நடக்கும். இதன் காரணாக ஆண்டிபட்டி அருகே அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. அப்படித்தான் இன்றும் விபத்து நடந்துள்ளது.
மதுரையில் இருந்து தேனி நோக்கி 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது திடீரென வெளியே குதித்த அரசு பேருந்து ஓட்டுநர் தங்கபாண்டியன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம் அரசு பஸ், சாலையோரம் இருந்த முள்வேலி மீது மோதி சிறிய சேதாரத்துடன் நின்றது; பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஓட்டுநரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications