என் கூட சென்னைக்கு வந்துரு ஆத்தா! கடைசியாக அம்மாவுக்கு பிடித்த பூந்தி வாங்கிச் சென்ற மாரிமுத்து!
தேனி: மறைந்த குணச்சித்திர நடிகர் மாரிமுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது தாயை பார்க்கச் சென்ற போது, அவரை தன்னுடன் சென்னைக்கு வருமாறும் தனது வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வதாகவும் கூறி அழைத்திருக்கிறார்.
ஆனால் பசுமலைதேரி கிராமத்தை விட்டு தாம் எங்கேயும் வரமாட்டேன் என்று மகன் மாரிமுத்துவின் அழைப்பை நிராகரித்திருக்கிறார் அவரது அம்மா. இதையடுத்து தனது அம்மா பிரியமாக சாப்பிடக் கூடிய பூந்தி வாங்கிக் கொடுத்துவிட்டு செலவுக்கு கொஞ்சம் பணத்தையும் கொடுத்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் மாரிமுத்து.

இதனை செய்தி தொலைக்காட்சி ஒன்றுகு அளித்த பேட்டியில் மாரிமுத்துவின் தாய் கூறியிருக்கிறார். சினிமாதுறைக்கு போனதால் தான் தனது மகன் இளம் வயதில் மறைந்துவிட்டதாக தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த மாரிமுத்துவின் தாயார் மாரியம்மாள், மேற்கொண்டு மகனை பற்றி பேசமுடியாமல் தழுதழுத்தார்.
மாரிமுத்துவுக்கு முன்னால் பிறந்த 4 பேரும் பெண் குழந்தைகள் என்பதால் ஆண் குழந்தை வேண்டும் என கோவில் கோவிலாக நேர்த்திக்கடன் செய்து பெற்ற பிள்ளை தான் மாரிமுத்து என அவரது தாயார் தெரிவித்துள்ளார். சினிமாதுறைக்கு போனதால் தான் தனது மகன் இளம் வயதில் மறைந்துவிட்டதாக மாரிமுத்துவின் தாயார் கூறியிருப்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
25 ஆண்டுகாலம் படாத கஷ்டப்பட்டு படிப்படியாக புகழ் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருந்த நேரத்தில் மாரிமுத்து மறைந்திருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications