வைகோவிடம் இருந்து போன திடீர் போன்! உருகிப்போன ஓ.பன்னீர்செல்வம்! துயர நேரத்தில் ஆறுதல்!
ஓ.பன்னீர்செல்வத்துக்கே நேரடியாக போன் போட்டு ஆறுதல் சொன்ன வைகோ.
தேனி: ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலம் திடீரென அழைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவருக்கு ஆறுதல் சொல்லி தாயாரின் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
வைகோ தன்னிடம் நேரடியாக பேசுவார் என்பதை எதிர்பார்க்காத ஓ.பன்னீர்செல்வம் அவர் காட்டிய பரிவால் உருகிப் போயிருக்கிறார்.
இதனிடையே அதிமுக ஆட்சிக்காலத்தில் தன்னால் பயன் பெற்றவர்கள் பலரும் துக்கம் கூட விசாரிக்காததை எண்ணி ஓ.பன்னீர்செல்வம் ரொம்பவே நொந்து கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் அம்மா
ஓ.பன்னீர்செல்வத்தின் அம்மா பழனியம்மாள் தனது 95வது வயதில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்றிரவு காலமானார். ஜெயலலிதாவை அம்மா அம்மா என வாய் நிறைய ஓ.பன்னீர்செல்வம் அழைக்கும் நிலையில் அவரது பிறந்த நாளும், பெற்ற தாயின் இறந்த நாளும் பிப்ரவரி 24 என்ற ஒரே தேதியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆண்டுதோறும் பிப்ரவரி 24ஆம் தேதியை ஓபிஎஸ் கொண்டாடுவாரா அல்லது துக்கம் அனுசரிப்பாரா என ஒரு பக்கம் விவாதம் எழுந்துள்ளது.

வைகோ போனில் ஆறுதல்
இதனிடையே வைகோ, ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். இதில் வைகோ இரங்கல் தெரிவித்ததோடு தனது கடமை முடிந்தது என எண்ணிவிடாமல், ஓ.பன்னீர்செல்வத்துக்கே போன் போட்டு அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ஆறுதலும் கூறியிருக்கிறார். வைகோவிடம் இருந்து தனக்கு போன் வரும் என்பதை எதிர்பார்க்காத ஓ.பி.எஸ். அவர் காட்டிய பரிவால் உருகிப் போயிருக்கிறார்.

ஜவாஹிருல்லா இரங்கல்
இதனிடையே மமக தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள இரங்கல் பதிவு வருமாறு; ''முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) உடல் நலக்குறைவு காரணமாக உயர்நீத்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். தாயை பிரிந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு கூறியுள்ளார்.

ஆறுதல் சொல்லவில்லை
மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள், மற்றுக்கட்சிகளில் உள்ள தன்னால் கடந்த ஆட்சிக்காலங்களில் பலன் பெற்றவர்கள் எல்லாம் தனக்கு ஆறுதல் தெரிவிக்கும் நிலையில், அதிமுகவில் கடந்த ஆட்சிக்காலங்களில் தன்னால் பயன் பெற்றவர்கள் பலர் ஆறுதல் சொல்லக்கூட முன்வரவில்லை என்பதை நினைத்த ரொம்பவே வருந்தியிருக்கிறார் ஓபிஎஸ்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications