விஸ்வரூபமாகும் மேகமலை விவகாரம்.. ஆக்கிரமிப்பாளர்களில் 118 பேர் அரசு ஊழியர்கள்! ஆக்‌ஷன் எடுக்க ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை மற்றும் வருசநாடு வனப்பகுதியில் பல தலைமுறைகள் வசித்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அந்த பகுதியில் இருந்து வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அந்த மலைப் பகுதியில் 98 கிராமங்களில் வசிக்கும் 118 பேர் அரசு ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது உயரதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலை, வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை மலைப்பகுதிகளில், வண்டியூர், நரியூத்து, வருசநாடு, கோதையூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

Meghamalai

அதாவது பாண்டிய மன்னர் காலத்தில் இருந்தே அங்கு பல கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அப்போதிருந்து அங்கிள் மக்கள் வசித்து இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் கண்டமனூர் ஜமீன் காலத்தில் ஏராளமான மக்கள் அங்கு கீழ் மறைப்பகுதிகளில் மேல் மலைக்கு சென்றுள்ளனர்.

கூலிகளாக அங்கு அழைத்துச் செல்லப்பட்டு காடுகளை சுத்தப்படுத்தி அவற்றை விவசாய நிலங்களாக மாற்றி வசித்து வருகின்றனர். இலவம்பஞ்சு, முந்திரி உள்ளிட்ட விவசாய பயிர்களை சாகுபடி செய்வதோடு மாடு மேய்ப்பதும் கோழி வளர்ப்பதும் இவர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த பகுதியில் சுமார் 5000 வெக்டர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறை அனுமதியின்றி சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாண்புமி உச்ச நீதிமன்றம் 2026 மே மாதம் 29ஆம் தேதி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. தேனி மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையின் படி இந்த பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் நான்காயிரத்தி அறநூத்தி ஒரு ஆக்கிரமிப்பாளர்கள் மொத்தம் 572.653 ஹெக்ட நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். இது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். மேலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் துணைய இராணுவத்தை பயன்படுத்தி அங்கிருக்கும் மக்களை வெளியேற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்துள்ளது. இந்த நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு அப்பகுதி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேகமலை வருசநாடு மலைப்பகுதியில் சுமார் 98 கிராமங்களைச் சேர்ந்த 4000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என குறிப்பிட்டு இருக்கும் நிலையில் அவர்களின் பலர் காவல்துறை, வனத்துறை, ராணுவம், துணை ராணுவம், வருவாய் துறை, மின்வாரியம் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் என 118 பேர் அரசு ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள 118 அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது அவரது உயர் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் தேனி மாவட்ட ஆட்சியர்/ மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+