சித்தப்பா மகன் மீது மோகம்.. விபரீத காதல்.. விளைவு பறிபோனது ஒரு உயிர்!
திருமணம் ஆன 2-ம் நாளில் புதுமண பெண் உள்ளிட்ட 2 பேர் தற்கொலை
Recommended Video

தேனி: ஒரு பெண் தன் அண்ணனை காதலிக்கலாமா? விளைவு... விருந்துக்கு போன கல்யாண பெண் விஷத்தை குடித்து இறந்தே போனார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஊர் புலிக்குத்தி. இந்த ஊரை சேர்ந்த பெண்தான் ரம்யா. 21 வயதான ரம்யாவுக்கு கடந்த 11-ந் தேதி ரங்கராஜ் என்பவருடன் தடபுடலாக கல்யாணம் நடந்தது. பின்னர் விருந்துக்காக 2-வது நாளில் புதுமண தம்பதிகள் புலிக்குத்தி கிராமத்துக்கு வந்தனர்.
பொண்ணு, மாப்பிள்ளையை பார்க்க ஊரே திரண்டு வந்தது. அப்போது ரம்யாவின் சித்தப்பா மகன் முத்துக்கிருஷ்ணனும் புதுமணத் தம்பதியை பார்க்க வந்திருந்தார். விருந்துக்கு ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் ரம்யாவும், முத்துக்கிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கு காணவில்லை. தேடி பார்த்தால் முத்துகிருஷ்ணனையும் காணவில்லை.

ரம்யா உயிரிழந்தார்
இருவரையும் தேடி பார்த்த போது, வீட்டின் அருகில் இருவருமே மயங்கி விழுந்து கிடந்தனர். அவர்களுக்கு அருகில் ஒரு விஷ பாட்டில் உருண்டு கிடந்தது. இதைப் பார்த்து பதறிய உறவினர்கள் அலறி அடித்து கொண்டு இருவரையும் போடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் வழியிலேயே ரம்யா உயிரிழந்தார்.

முறையற்ற காதல்
இதையடுத்து முத்துக்கிருஷ்ணனை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அங்கு அவரது நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான், ரம்யாவும், அண்ணன் முறையான முத்துக்கிருஷ்ணனும் ஒருவரையொருவர் லவ் பண்ணி வந்தார்கள் என்பது தெரியவந்தது. அது மட்டும் இல்லை, இந்த லவ் மேட்டர் ரம்யா வீட்டுக்கும் தெரிந்திருக்கிறது.

ரம்யாவின் பிடிவாதம்
விஷயம் தெரிந்த உடனேயே, அதிர்ச்சி அடைந்த பெற்றோர், "இது தவறு என்றும் சாத்தியம் இல்லை என்றும் பலமுறை ரம்யாவை கண்டித்திருக்கிறார்கள். ஆனால் ரம்யாவோ பிடிவாதமாக இருந்ததுடன், தன் காதல் இப்படிப்பட்டது, அப்படிப்பட்டது என்று பெற்றோரிடம் எடுத்து சொல்லி வந்துள்ளார். ரம்யாவின் பிடிவாதத்தை பார்த்ததும் பயந்துபோன பெற்றோர்கள், உடனடியாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள்.

விசாரணை தீவிரம்
அவர்களிடம் இந்த காதல் விவகாரத்தை மறைத்து திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். திருமணம் நடந்ததை ரம்யா - முத்துகிருஷ்ணனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்ததும் தற்கொலைக்கு துணிந்து விட்டார்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. எனினும் போலீசார் இது சம்பந்தமாக தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications