“சேர்மன் ஓபிஎஸ்”.. “தினகரன் சார்”.. பாச மழை! 24 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடம்- ஒரே மேடை: இணைந்த கைகள்!
தேனி: தேனி பங்களாமேடு பகுதியில் 24 ஆண்டுகளுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரும் ஒரே மேடையில் தோன்றிப் பேசிய நிலையில், இன்றும் அதே இடத்தில் ஒரே மேடையில் இணைந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருவரும் ஆவேசமாகப் பேசியுள்ளனர்.
நீண்டகால நட்பு: 1996ஆம் ஆண்டு பெரியகுளம் நகர்மன்ற சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது முதலே டிடிவி தினகரனுக்கும் நெருக்கமானவர் ஆனார் ஓபிஎஸ். அப்போது ஓபிஎஸ்ஸை 'சேர்மன்' என அழைக்கத் தொடங்கிய தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர், முதலமைச்சர் என அடுத்தடுத்து பெரிய பதவிகளை அலங்கரித்த பிறகும் கூட பழைய பாசத்தோடு சேர்மன் என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நின்று எம்.பி ஆனவர் டிடிவி தினகரன். இதனால் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக நல்ல நட்பு உண்டு. எனினும், ஜெயலலிதா - சசிகலா குடும்பத்தினர் இடையே சில ஆண்டுகள் இருந்து வந்த பிணக்கு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மேற்கொண்ட தர்ம யுத்தம் ஆகியவை காரணமாக பல ஆண்டுகளாகவே இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
இணைந்த கைகள்: இந்தச் சூழலில் தான் கடந்த ஆண்டு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட அதிகார மோதலைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தனித்து இயங்கி வருகிறார். அப்போது முதல், டிடிவி தினகரனை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் எனக் கூறி வந்தார். தினகரனும் அவ்வாறே கூறினாலும், பல மாதங்களாக அதற்கான சூழல் அமையவில்லை. அண்மையில் தான் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர்.

2024 தேர்தலைக் குறிவைத்து, அதிமுக கூட்டணியில் இணையும் முடிவில் தினகரன் இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ் உடன் பரஸ்பர நல்லுறவைக் கடைபிடித்து வருகிறார். இந்த நட்பு பாலத்திற்கு ஃபெவிகால் போடும் வகையிலேயே இன்று தேனியில் ஓபிஎஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஓபிஎஸ் உடன் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசினார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
அதே இடத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு: டி.டி.வி.தினகரன் 1999ல் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, முதல் அறிமுகக் கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அதன் பிறகு அதே பங்களாமேடு பகுதியில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசியுள்ளனர்.

மக்கள் செல்வன் தினகரன் சார்: இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேனியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்துள்ள நெஞ்சம் நிறைந்த அருமை அண்ணன் நாமெல்லாம் இதய பூர்வமாக மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கும் டிடிவி தினகரன் சார் இங்கு வந்து கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார்.
மேலும், "மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு இல்லத்தில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக விசாரணை செய்ய வேண்டும். இதுகுறித்து தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் உரிய தண்டனையை கோடநாடு கொள்ளைக் கூட்டத்துக்கும், கொலையாளிகளுக்கும் பெற்றுத்தர வேண்டும்." என்றார்.
அருமை நண்பர் ஓபிஎஸ்: டிடிவி தினகரன் பேசுகையில், "அருமை நண்பர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் நிற்கின்றனர். இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை. விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள்.
ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை. நாங்கள் இணைந்தது இயற்கையாக நடந்திருக்கிறது. துரோகிகள் அபகரித்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட சின்னத்தை மீட்டெடுத்து ஜெயலலிதாவின் தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்" எனப் பேசினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications