பவதாரிணி உடல் நல்லடக்கம்.. கண்ணீருடன் இளையராஜா.. கையைப் பிடித்து ஆறுதல் தெரிவித்த ஓபிஎஸ்!
தேனி: இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நல்லடக்கம் தேனி லோயர் கேம்ப் பகுதியில் நடைபெற்ற நிலையில், முன்னதாக பவதாரிணி உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் இறுதி அஞ்சலி செலுத்தி, இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47). பின்னணி பாடகியான பவதாரிணி, ராசய்யா, அலெக்சாண்டர், அழகி, தாமிரபரணி, உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களில் பாடல் பாடியுள்ளார். 2000-ம் ஆண்டில் வெளியான 'பாரதி' என்ற திரைப்படத்தில் 'மயில் போல பொண்ணு ஒண்ணு' என்ற பாடல் பாடியதற்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். பவதாரிணியின் உடல் நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்பு இவரது உடல் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. இன்று காலை அங்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த வளாகத்தில்தான் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள், மனைவி ஜீவா ஆகியோரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மணி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இளையராஜா மகள் பவதாரிணி உடல், அவரது தாயார் மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
பவதாரிணி உடலுக்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார் ஓபிஎஸ்.
தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், முருக்கோடை ராமர், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான் உள்ளிட்ட பலரும் பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications