ஆஹா.. ஜெ. காலில் விழுந்தது போலவே... மோடி காலில் பொத் பொத்தென்று விழுந்த வேட்பாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

தேனி: இன்றைக்கு தேனி கூட்டத்தில் நடந்ததை எல்லாம் பார்த்தால், இதுக்கு முன்னாடி அதையெல்லாம் நாம பார்த்த மாதிரியே அப்படியே கண் முன்னாடி வந்து வந்து போகுது!

பிரதமர் மோடியின் காலில் ஓபிஎஸ் மகன் விழுந்து ஆசிபெற்றதைத் தொடர்ந்து, மற்ற வேட்பாளர்களும் அடுத்தடுத்து மோடியின் காலில் விழுந்தனர்.அவர்களை பிரதமர் மோடி வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடியில் ஒத்தை ஆளாக, கட்சி மேலிடம் யாருமே வராமல் பாஜக சார்பாக தமிழிசை பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கோ பிரதமர் தேனிக்கே வந்துவிட்டார் வாக்கு சேகரிக்க!

பொன்.ராதா கிருஷ்ணன்

பொன்.ராதா கிருஷ்ணன்

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் உட்பட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேமுதிக, பாமக, தமாகா என கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.

ரவீந்திரநாத்

ரவீந்திரநாத்

மேடையில் பேசுவதற்கு முன்னதாக, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தொகுதி வேட்பாளர் என்ற முறையில் பூச்செண்டு தந்து வரவேற்றார். அதனை மோடியும் பெற்று கொண்டார். பிறகு தபக்கென யாருமே எதிர்பார்க்காத வகையில் மோடி காலில் சாஷ்டாங்கமாக விழ போனார். இதை மோடியே எதிர்பார்க்கவில்லை.

நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

காலில் விழுந்தனர்

காலில் விழுந்தனர்

உடனே அவரை சிரித்தபடியே தடுத்து நிறுத்தினார் மோடி. ஓபிஎஸ் மகன் மட்டும் ஆசீர்வாதம் வாங்குகிறாரே, நாமளும் வாங்கி கொள்வோம் என நினைத்த மற்ற வேட்பாளர்கள் ஒன் பை ஒன்னாக மோடி காலில் விழுந்தனர். ஆனால் அவர்களையும் மோடி தடுத்து நிறுத்தி, இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றார்.

டாடி-அம்மா

டாடி-அம்மா

ஆனால் இவ்வளவையும் மோடிக்கு பக்கத்திலேயே நின்று பார்த்து கொண்டிருந்தார் ஓபிஎஸ்! காலில் விழும் கலாச்சாரம் என்றாலே தமிழகத்துக்கு அறிமுகம் ஆனது இவர் மூலமாகத்தான்! பணிவு, ஆசீர்வாதம், பவ்யம் என்றாலே கண் முன் வருவது ஓபிஎஸ்தான்! ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்! டாடி வளர்ந்துவிட்ட நிலையில், அவரது மகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க ஆரம்பித்துள்ளார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+