ஒன்று சேர நான் ரெடி.. அவங்க ரெடியா? இறுதி முடிவு அண்ணன் எடப்பாடி தான் எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
தேனி: வரும் சட்டசபை தேர்தலை யாருடன் கூட்டணி வைத்து களம் காண்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒன்று சேர நான் ரெடி.. அவங்க ரெடியா என்றும், இறுதி முடிவினை அண்ணன் எடப்பாடி தான் எடுக்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீர் ட்விஸ்ட்டாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் மௌனம் சாதித்து வருகிறது.

இவ்வாறு மவுனம் காத்து வருவதால் ஓபிஎஸ்ஸுடன் இருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவருடன் இருந்து விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துவிட்டனர். தற்போதைய சூழலில் ஓபிஎஸ்ஸுடன் தெரிந்த முகம் என்றால் அது வெல்லமண்டி நடராஜனும் ஐயப்பன் எம்எல்ஏவும்தான்.
இந்த நிலையில் இந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக, நேற்று பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்ட செய்தியாளர்களிடம் போடி அலுவலகம் புறப்பட்ட ஓபிஎஸ் பேசினார்.
அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு அவர், "இன்று (வியாழன்) நிர்வாகிகளுடன் ஆலோசனைக்குப் பின் முடிவை அறிவிக்கிறேன்," என்று அவசரமாகக் கூறிவிட்டுச் சென்றார்.
இதனிடையே, தேனி மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகச் செயலாளர் எஸ்பிஎம்.சையதுகான் தலைமையில் இன்று கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகாவது மௌனம் கலைப்பார் என ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார் எனவும், தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதை அமமுக பொதுச் செயலாளர் தினகரனும், கூறி வருகிறார்.
வாக்கு சதவீதமே வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால், ஓபிஎஸ்ஸை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
அண்மையில் சட்டசபை கூட்டத் தொடரின் போது ஓபிஎஸ்ஸுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது ஓபிஎஸ், தன்னுடன் இருக்கும் வெல்லமண்டி நடராஜன், ஐயப்பனுக்கு எம்எல்ஏ சீட், தனது மகன் ஓபி ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா சீட் தருவதென்றால் தான் திமுகவில் இணைய தயார் என சொன்னதாகவும் அதற்கு தலைமை ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ்ஸும் அவரது மகனும் அண்மையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தனர். அடுத்து சேகர்பாபுவுடனும் ஆலோசனை நடத்தியதால் அவர் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது.
ஆனால் இன்று யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒன்றிணைய நான் ரெடி.. அவங்க ரெடியா.. டிடிவி தினகரனும் இதைத் தான் சொல்லி வந்தார். இறுதி முடிவு குறித்து அண்ணன் எடப்பாடி தான் எடுக்க வேண்டும். எல்லாரும் அண்ணன் தம்பியாக தான் இருக்கிறோம்.. குழப்பம் விளைவிக்க வேண்டியே சில தவறான செய்திகள் பரப்பி விடுகின்றனர். என்று கூறினார்.
மேலும் கூறுகையில், “ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடாது. தேனி மாவட்டத்தில் ஒன்றிணைந்து இருக்கும் போது நிர்வாகிகள் எப்படி இருந்தார்களோ.. அப்படித்தான் இப்போதும் உள்ளனர். அவர்களுக்காக தான் இன்று நான் இந்த கூட்டத்தினை கூட்டினேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரியத் தான் இந்த கூட்டம். அவர்கள் நீங்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என எனக்கு முடிவு எடுக்க அதிகாரம் கொடுத்துவிட்டனர்.
என்னுடைய அருமை அண்ணன் எடப்பாடி அவர்கள் கையில் தான் முடிவு இருக்கிறது. எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடியும், டிடிவி தினகரனும் இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளனர். டிடிவி தினகரனும் கூட்டணிக்கு வர வேண்டும் என நட்பு ரீதியாக சொல்லி வருகிறார். நானும் அப்படித்தான் சொல்கிறேன். எனவே டிடிவியும் ஒன்றிணைவதற்கு எடப்பாடியிடம் வலியுறுத்த வேண்டும். ஒன்றிணைவதற்கு நான் ரெடி என சொல்லிவிட்டேன். முடிவு யார் கையில் இருக்கிறது. என்றார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications