குமாரை கட் பண்ணிட்டு நியூமராலஜி படி பெயரை மாற்றிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்
தேனி லோக்சபா தொகுதி எம்.பியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனுமான ப.ரவீந்திரநாத் குமார் இன்று முதல் தனது பெயரை ப.ரவீந்திரநாத் என்று மாற்றி உள்ளார்.
தேனி: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி லோக்சபா தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் தனது பெயரை நியூமராலஜிபடி மாற்றியுள்ளார். P.Raveendranath Kumar என்று இருந்த பெயரை 2 eஐ கட் பண்ணிவிட்டு P Ravindhranath என ஒரு iயும் கூடவே Hம் சேர்த்து உள்ளார் குமாரை மொத்தமாக தூக்கி விட்டார்.
இந்த பெயர் மாற்றம் அவரை மத்திய அமைச்சராக்குமா அவரது கனவு நனவாகுமா என்று பார்க்கலாம்.
பெற்றோர்கள் குல தெய்வ கோவிலில் காது குத்தி மொட்டை அடித்து பெயர் வைப்பார்கள். அந்த பெயரை ராசிப்படி சிலர் மாற்றி வைத்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகள் சிலர் எண் கணிதப்படி பெயரை மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
தமிழக அரசியல்வாதிகளில் செந்தில்பாலாஜியும் ராஜேந்திரபாலாஜியும் பெயரை மாற்றி வைத்து அமைச்சரானவர்கள்தான். இதே போல மத்திய அமைச்சராகும் கனவில் பெயரை மாற்றி வைத்திருக்கிறார் எம்.பி ரவீந்திரநாத்.

ஓபிஎஸ்
அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையில் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அதிமுக முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர்.

பெயர் மாற்றிய ஓபிஎஸ்
இந்த சூழ்நிலையில்தான் அவரது மகனும் தேனி லோக்சபா தொகுதியின் எம்.பியுமான ரவீந்திரநாத் குமார் தனது பெயரை ரவீந்திரநாத் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.

நியூமராலஜி
எண் கணிதம் அடிப்படையில், ஆங்கிலத்தில், P. Raveendranath Kumar என்பதில் இருந்த 2 eஐயும் குமாரையும் தூக்கி விட்டார் Ravindhranath என புதிதாக மாற்றியுள்ளார் ஒரு iஐம் hம் சேர்த்துள்ளார்.

அமைச்சராகும் கனவு
எம்பியான நாள் முதலே மத்திய அமைச்சர் கனவில் இருக்கிறார் ரவீந்திரநாத். இரண்டு முறை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடந்த போதும் அந்த கனவு நனவாகவில்லை.

கனவு நனவாகுமா
அமைச்சராகவேண்டும் யாகங்கள் செய்தும் கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைத்து வருகிறார். ஆனால் அமைச்சராகவேண்டும் என்ற எண்ணம் ஈடேறவில்லை. இந்த சூழ்நிலையில்தான் தற்போது தனது பெயரை நியூமராலஜி படி மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த பெயர் மாற்றம் அவரது கனவை நனவாக்குமா பார்க்கலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications