"ஓபிஎஸ் வீட்டை உடைக்க எங்களுக்கு எவ்வளவு நேரமாகும்.." தேனிக்கே போய் கொக்கரித்த ஆர்.பி.உதயகுமார்
தேனி: அதிமுக அலுவலகத்தை சூறையாடியது போல் ஓபிஎஸ் வீட்டை சூறையாட எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பாக நேற்றைய தினம் மாவட்டத் தலைநகரங்களில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. தேனி மாவட்டத்தில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.
ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் பெரிய அளவில் ஆட்களை திரட்டி நாம் யார் என காண்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு விரும்பியது. இதற்கான பொறுப்பை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இன்றைய தினம் தேனி மாவட்டமே குலுங்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார் ஆர் பி உதயகுமார். திமுக அரசை கண்டித்ததுடன் ஓபிஎஸ் தரப்பையும் ஒரு கை பார்த்தார். அவர் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் தர்மயுத்தம் நடத்திய ஓ பன்னீர் செல்வம் தற்போது துரோக யுத்தம் நடத்தி வருகிறார்.

தேனி மாவட்டம்
தேனி மாவட்டத்திற்குள் நுழைய முடியுமா என சிலர் சவால் விட்டனர். திமுகவின் கைக்கூலியாக மாறி சதித்திட்டம் தீட்டினால் அது பகல் கனவாகத்தான் முடியும். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது எடப்பாடி பழனிச்சாமி 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

போடி தொகுதி
ஆனால் ஓபிஎஸ் போடி தொகுதியை மட்டும் சுற்றி வந்தார். இப்படி சுயநலத்துடன் இருக்கும் இவர்தான் தலைவரா தேனி மாவட்டத்தின்தான் அதிக பொதுக் குழு உறுப்பினர்கள் உள்ளார்கள். விசுவாசம் மிக்க மாவட்டத்திலிருந்து சில துரோகிகளும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சூறையாட எவ்வளவு நேரம் ஆகும்
ஜெயலலிதா வாழ்ந்த தலைமை கழகத்தை தொண்டர்கள் கோயிலாக பாவிக்கிறார்கள். ஆனால் அந்த "கோயிலையே" உடைத்ததை எந்த தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள். கோயில் போல இருந்த இடத்தை குண்டர்களை வைத்துச் சூறையாடினீர்கள். உங்கள் வீட்டை உடைக்க எவ்வளவு நேரம் ஆகும்? என கேள்வி எழுப்பினார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications