சாவர்க்கர்-புல்புல் பஞ்சாயத்து.. இபிஎஸ்ஐ இழுத்துவிட்ட “தங்கம்” பறந்தாரா? தவழ்ந்தாரா? ஓ பிளாஷ்பேக்கா
தேனி: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாவர்க்கர் புல் புல் பறவையில் பறந்தாரா அல்லது எடப்பாடி பழனிசாமியைபோல் தவழ்ந்து சென்றாரா என்பதை உலகம் அறியும் என திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார்.
கர்நாடக கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த அடையாளங்கள் இருக்கக்கூடாது என்று இஸ்லாமிய மாணவிகள் அணிந்து வரக்கூடிய ஹிஜாபுக்கு அம்மாநில அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமூக அறிவியல் மற்றும் மொழி பாடபுத்தகங்களில் உள்ள பாடங்களை திருத்தம் செய்ய ரோகித் சக்ரதிர்தா என்பவர் தலைமையில் கர்நாடக அரசு குழு அமைத்தது.

பெரியார் பாடம் நீக்கம்
இந்த புதிய குழு, வரும் கல்வியாண்டுக்கான மொழி மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தந்தை பெரியார், நாராயண குரு உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள், முற்போக்கு கருத்து கொண்ட தலைவர்கள் குறித்த பாடங்கள் அகற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆர்.எஸ்.எஸ். கல்வி
அதற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும், மதவெறியையும் போதிக்கூடிய பாடங்கள் புதிய புத்தகங்களில் சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேஷவ் பலிராம் ஹேட்கேவர், சாவர்க்கர் குறித்த பாடங்கள் கர்நாடக அரசு வெளியிட்டு இருக்கும் பள்ளி பாட புத்தகங்களில் இடம் இருப்பதாக புகார்கள் குவிந்தன.

சாவர்க்கர் சர்ச்சை
இந்த நிலையில் கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு கன்னட மொழி பாடப்புத்தகத்தில் ''அந்தமான் சிறைச்சாலையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டு இருந்த சிறிய அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால், அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது ஏறி அமரும் சாவர்க்கர் தினமும் தாய் மண்ணிற்கு வந்து செல்வார்.'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தங்க தமிழ்செல்வன் டுவீட்
இதுகுறித்து முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரும் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்க தமிழ்செல்வன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், " புல்புல் பறவையின் இறக்கையில் பறந்து சென்றார் சாவர்க்கர் என்று கர்நாடக பாஜக அரசு பாடப்புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். கல்விக் கொள்கையை திணித்துள்ளது. சாவர்க்கர் பறந்து சென்றாரா இல்லை இபிஎஸ் போல தவழ்ந்து சென்றாரா என்று உலகம் அறியும்." என குறிப்பிட்டு உள்ளார்.
-
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications