எடப்பாடி பழனிசாமி குறித்து தேனியில் ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த ஓ பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்ட போடிநாயக்கனூர் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஸ்டாலின் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "விசுவாசம் என்று சொல்லுகிற அளவுக்கு ஜெயலலிதா நன்மதிப்பை பெற்றவர், உலக மகா துரோகியை உலகிற்கு அடையாளம் காட்டியவர் ஓபிஎஸ். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிற, பாஜகவிற்கு வாக்கு கேட்கிறார் பழனிச்சாமி, தமிழ்நாட்டுக்கு கெடுதல் செய்ய ஊழல்வாதிகளை மிரட்டி ஏற்பட்ட கூட்டணி தான் என்டிஏ கூட்டணி" என்று ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது கூறினார்.

தேனி மாவட்ட திமுக மற்றும் விசிக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், "இது வெறும் தேர்தல் களம் மட்டும் அல்ல போர்க்களம், தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்கிற சொல்லை கேட்டால் நசுக்கிற கூட்டம் உள்ளது, நம்முடைய குரல்கள் நாடாளுமன்றத்தில் கேட்க கூடாது என்று முயற்சி செய்கிறார்

Stalin s remarks regarding Edappadi Palaniswami in Theni O Panneerselvam Delighted

தொகுதி மறுவரையறை மூலம் உள்ளபடி நமக்கு வர வேண்டிய தொகுதிகளை குறைத்து உள்ளார்கள். தமிழ்நாடு முழுக்க கருப்பு கொடி கட்டி நமது எதிர்ப்பை காட்டியுள்ளோம். முதலமைச்சராகிய என்னுடைய எதிர்ப்பு தமிழக மக்களின் எதிர்ப்பு, தமிழர்களை மதிப்பது மட்டுமே நோக்கமாக வைத்து பேசுகிறார். நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு தெளிவாக சொல்கிறேன்.. இந்த மண்ணுல சமத்துவம், சமூக நீதி பொதுவுடமை கருப்பு சிவப்பு நிற கொடிகள் தான் பறக்கும்.. திமுக இருக்கும் வரை காவி கொடி ஒருபோதும் இங்கே பறக்காது, தன்மானம் உள்ள தொண்டர்கள் இங்கே காவி கொடியை பறக்க விட மாட்டார்கள்.. தமிழ்நாடா டெல்லியா? இந்த போரில் பழனிச்சாமியின் அடிமை அதிமுக துரத்த பட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து தேனி மாவட்ட போடிநாயக்கனூர் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஸ்டாலின்செய்தார். அப்போது அவர் பேசுகையில், "விசுவாசம் என்று சொல்லுகிற அளவுக்கு ஜெயலலிதா நன்மதிப்பை பெற்றவர், உலக மகா துரோகியை உலகிற்கு அடையாளம் காட்டியவர் ஓபிஎஸ், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிற, பாஜகவிற்கு வாக்கு கேட்கிறார் பழனிச்சாமி, தமிழ்நாட்டுக்கு கெடுதல் செய்ய ஊழல்வாதிகளை மிரட்டி ஏற்பட்ட கூட்டணி தான் என்டிஏ கூட்டணி.

தமிழ்நாட்டிற்கு செய்துள்ள ஒரே திட்டம் சொல்லுங்கள் என மோடியிடம் கேட்டேன் பதில் வரவில்லை.. தமிழ்நாட்டிற்கு செய்த திட்டத்தை பட்டியலிடுங்கள் என எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டேன் அதற்கும் பதில் இல்லை.. ஒன்றிய அரசு தமிழகத்திற்கான மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி இல்லை, ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை, சென்னை மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி இல்லை, அதிமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவிடம் கோரிக்கை வைத்து திட்டம் கொண்டு வருவார் என சொல்லுகிறார் எடப்பாடி பழனிசாமி, புலி பாண்டியாக மாறி அழுத்தம் தருவாராம். அறுக்க தெரியாதவர்கு 52 அருவாள் .. சசிகலா காலில் விழுந்து அவர் காலை வாரி விட்டு துரோகம் செய்தவர் இப்போது ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்துள்ளார்

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்து சிறை சென்றவர் (டிடிவி தினகரன் பெயரை குறிப்பிடவில்லை), எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் தூக்கு மாட்டிக்கொள்வேன் என கூறியவர், இப்போது அவருடன் சேர்ந்து உள்ளார். தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்காமல் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு கவலை இல்லை, 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தினாலும் கவலை இல்லை தொகுதி மறு சீரமைப்பு கொண்டு வந்த பாஜகவை எதிர்த்து பேச முடியவில்லை.

தமிழ்நாடு மீது கத்தி வைக்கப்படுகிறது என தெரிந்தும் தேர்தல் பிரச்சாரத்தை பிறகு பார்த்து கொள்ளலாம் என திமுக எம்.பி களை டெல்லிக்கு அனுப்பியுள்ளேன். 0.07 விழுக்காடு வளர்ச்சியில் தமிழ்நாட்டை விட்டு சென்ற எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழ்நாட்டை மீட்டெடுத்து 11.1 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளோம்.

நான் ஆட்சிக்கு வந்ததும் 2000 ரூபாய் உரிமை தொகை வழங்குவேன். "சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்"// திமுக தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார்.. பழனிச்சாமியின் அதிமுகவுக்கும், பாஜகவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கு தமிழ்நாட்டை நாசம் செய்ய ஒரு வாய்ப்பு, தமிழ்நாட்டை சுத்துகின்ற பாஜக என்னும் பருந்தை விரட்டி அடிக்க வேண்டும்

டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு தமிழ்நாட்டு அடிமைகள் ஆளக்கூடாது அதனால் தான் நான் அடிக்கடி கூறி வருகிறேன்.. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான போட்டி.. இப்போது தான் ஒரு நல்ல செய்தி வந்தது நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவறையரை கொண்டு வந்த தீர்மான் தோல்வி அடைந்து நாம் வெற்றி பெற்றுள்ளோம். 200 தொகுதிகள் மேல் வெல்லுவோம் நாம் தொடர்ந்து உழைப்போம் சரித்திர வெற்றி பெறுவோம்" இவ்வாறு ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+