தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொடி வைத்து பேசிய "வாரிசு".. 1 மாதத்திற்கு பின் வீட்டுக்கு போனார் ஓபிஎஸ்.. ஓடோடி பார்த்த டிடிவி "தூது"

Google Oneindia Tamil News

தேனி: நேற்று டிடிவி தினகரனை சந்தித்த சையது கான் இன்று தேனியில் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்தார்.

நேற்று தேனி சென்ற டிடிவி தினகரனை அங்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான நிர்வாகிகள் சந்தித்தனர். தேனி மாவட்ட அமமுக செயல்வீரர்கள்- வீராங்கனைகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் அங்கு சென்றார். இவரை ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் வரவேற்றார். ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான இவர்தான் முன்பு சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேனியில் தீர்மானம் நிறைவேற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

டிடிவி தினகரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் நிழலான மா.செ - ரைட்டு.. அப்போ கூட்டணி உறுதியா?டிடிவி தினகரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் நிழலான மா.செ - ரைட்டு.. அப்போ கூட்டணி உறுதியா?

சையது கான்

சையது கான்

இந்த நிலையில் நேற்று டிடிவி தினகரனை சந்தித்த சையது கான் இன்று ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்தார். ஓ பன்னீர்செல்வம் அவரது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு இன்று வந்தார். 1 மாதத்திற்கு பிறகு இன்று அவர் தனது சொந்த ஊருக்கு வந்தார். முன்னதாக அதிமுகவில் பொதுக்குழு நடக்கும் முன் தென் மாவட்டங்களுக்கு ஓ பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக ஓ பன்னீர்செல்வம் தேனிக்கு சென்றார்.

 தேனி மாவட்டம்

தேனி மாவட்டம்

இந்த நிலையில்தான் இன்று மீண்டும் ஓபிஎஸ் வீட்டிற்கு வந்தார். தேனி வந்த அவரை தேனி மாவட்ட செயலாளர் சையது கான் வரவேற்றார். அவருடன் மாவட்ட இணைச் செயலாளர் மஞ்சுளா முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார் உடன் இருந்தனர். ஓ பன்னீர்செல்வம் வருகிறார் என்று நேற்று இரவே இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று காலையே காரில் வந்து சையது கான் ஓபிஎஸ்ஸை வரவேற்க காத்து இருந்தனர்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ் வருகிறார் என்று தெரிந்ததும் அவரை சந்திக்க உள்ளூர் நிர்வாகிகள் பலர் காரில் வந்து காத்து இருந்தனர். இதையடுத்து சையது கான் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் காரில் பேசிக்கொண்டே வீட்டிற்கு சென்றார். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து இவர் இந்த பயணத்தில் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. நேற்று டிடிவி தினகரனை சந்தித்த சையது கான் அவரிடம் 15 நிமிடம் பேசினார்.

மோதல்

மோதல்

இதில் அதிமுக மோதல் பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் 12 மணி நேரத்தில் ஓபிஎஸ்சை சையது கான் சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இந்த தொடர் சந்திப்புகள் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த திடீர் சந்திப்பால் டிடிவி தினகரன் - ஓ பன்னீர்செல்வம் தரப்பு கைகோர்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக ரீதியாக இவர்கள் ஒன்றாக கரம் கோர்க்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    OPS-TTV சந்திப்பு? ரவீந்தரநாத் பதில்
    சந்திப்பார்களா?

    சந்திப்பார்களா?

    முன்னதாக தென்காசி, சங்கரன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேனி எம்பி ரவீந்திரநாத் குமார், டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து கொள்வார்களா என்ற கேள்விக்கு இதுவரை சந்திப்பு நடைபெறவில்லை. அவர்கள் இதுவரை சந்திக்கவில்லை. ஆனால் இனிமேல் சந்தித்துக்கொள்வார்களா என்று சொல்ல முடியாது.. தொண்டர்கள் மனதில் நினைப்பது போல் இருக்கும், என்று கூறினார். ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பு குறித்து ரவீந்திரநாத் பொடி வைத்து பேசிய நிலையில்தான் இன்று சையது கான் - ஓபிஎஸ் சந்திப்பு நடந்துள்ளது. டிடிவி - ஓபிஎஸ் இடையே இவர் தூதுவராக செயல்படுகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    English summary
    Syed Khan meets O Panneerselvam within 12 hours after meeting TTV Dinakaran . நேற்று டிடிவி தினகரனை சந்தித்த சையது கான் இன்று தேனியில் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்தார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X