Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தை பொறந்தாச்சே.. திமுகவா? தவெகவா?” லாக் செய்த செய்தியாளர்கள்.. ஓபிஎஸ் ரியாக்‌ஷனை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

தேனி: சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு தை பிறந்ததும் சொல்கிறேன் எனக் கூறி வந்தார் ஓபிஎஸ். இந்நிலையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறினீர்களே? என்ற கேள்விக்கு, "இன்றைக்கு தான் தை பிறந்திருக்கிறது. நல்ல வழி பிறக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தை மாதத்தில் இன்னும் 30 நாளும் இருக்கிறது" எனக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னி குயிக்கின் 185வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பென்னி குவிக் மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் அவரது திருவுருவ வெண்கல சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

tvk vijay o panneerselvam

அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "நம்முடைய தென் தமிழகத்தின் குடிநீர் ஆதாரத்திற்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் தெய்வமாக நின்ற தெய்வத் திருமகன் பென்னிகுவிக் முல்லைப் பெரியாற்றில் ஒரு நம்முடைய தேனி மாவட்டத்தின் மலைப்பகுதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரையில் இருக்கும் மக்களுக்கு தாகம் தீர்ப்பதற்கும், இந்த பகுதி விவசாய பூமியாக உருமாறி விவசாய பெருங்குடி மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குவதற்கும் பென்னிகுவிக் செய்த தியாகம் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

பென்னிகுவிக் அவர்களுக்கு இந்த பகுதி மக்களுக்கு ஆற்றிய அருந்தொண்டை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பென்னி குவிக்கின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு ஒரு மிகப்பெரிய மணிமண்டபத்தை இங்கு நிறுவினார். தேனி மாநகரில் புதிய பேருந்து நிலையத்திற்கு பென்னிகுவிக் பெயரைச் சூட்டினார். அவரது நினைவைப் போற்றுகின்ற வகையில் மிகப்பெரிய பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தினார் என்பதையும் இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணைக்கட்டு மொத்த உயரம் 152 அடி என்ற நிலையில் தான் பென்னி குவிக் இந்த அணையைக் கட்டி முடித்தார் திமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகளுக்காக அதனுடைய உயரத்தினை 136 அடியாக நிலை நிறுத்தினார்கள். ஜெயலலிதா அதனைப் புரிந்து கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் உடைய அனைத்து பராமரிப்பு பணிகளையும் அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்து முடித்தார்கள் என்பதை நான் இங்கே நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன். அதிமுக ஆட்சியில் அந்த அணையை மீண்டும் பலப்படுத்தியதன் விளைவாக இந்த அணை எந்த நிலையிலும், பூகம்பம் ஏற்பட்டாலும் அணைக்கு எந்த சேதமும் ஏற்படாது என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கித் தந்தார்" என்றார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறினீர்களே? என்ற கேள்விக்கு, "இன்றைக்கு தான் தை பிறந்திருக்கிறது. நல்ல வழி பிறக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தை மாதத்தில் இன்னும் 30 நாளும் இருக்கிறது" என்றார். சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு. "மக்கள் அதை முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி தமிழ்நாட்டில் நிலவுகிறது. இன்னும் சில கட்சிகள் எவ்வித கூட்டணியிலும் சேராமல் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓ.பன்னீர்செல்வம், இந்த முறை பாஜகவும் - அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளதால் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் பாஜக - அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த பலர் திமுக பக்கமும், தவெக பக்கமும் சென்று இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் தான் கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு தை பிறந்ததும் சொல்கிறேன் எனக் கூறி வந்தார் ஓபிஎஸ். இந்நிலையில், தை மாதம் பிறந்துள்ள நிலையில் இன்னும் 30 நாட்கள் இருக்கிறதே என சமாளித்துள்ளார் ஓபிஎஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+