திடீரென பறந்த ட்ரோனால் மிரண்ட அரிக்கொம்பன் .. லைக்ஸ்க்கு ஆசைப்பட்ட யூடியூபர் செஞ்ச வேலை
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் களம் இறங்கி உள்ள அரிக்கொம்பன் யானையால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதை மீறி 20 பேர் குவிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே திடீரென பறந்த ட்ரோனால் யானை மிரண்டது. லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு இந்த வேலையை செய்த யூடியூபர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் இருந்து பிடித்து மேகலையை ஒட்டிய புலிகள் காப்பக வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டிருந்தது. இந்த யானை மேகலை பகுதியிலேயே சுற்றித்திரிந்தது. இந்நிலையில் அரிக்கொம்பன் யானை அங்கிருந்து கீழ் இறங்கி, கம்பம் நகருக்குள் இன்று காலை புகுந்தது.

கம்பம் நகரில் சாலைகளில் பொதுமக்களை விரட்டி அச்சுறுத்தியதுடன், சில வீடுகளில் அரிசியையும் எடுக்க முயன்றது. அரிசி மீது கொள்ளை பிரியம் கொண்ட அந்த யானையை கேரளாவில் அரிக்கொம்பன் என்று அழைத்தார்கள். அதாவது கேரளாவில் அரி என்றால் தமிழில் அரிசி, அதன்படி அரிக்கொம்பன் என்ற அரிசி கொம்பன் தற்போது கம்பம் நகரை ஓட்டிய காட்டுப்பகுதியில் சுற்றித்திரிகிறது.
இந்த நிலையில் அரிகொம்பன் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது சிக்கல் ஏற்பட்டடிருக்கிறது.. யானையை எப்படி பிடிப்பது என்று வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த வேளையில் யூடியூபர்கள் ட்ரோன் பறக்கவிட்டு யானையை படம் எடுத்துக் கொண்டிருந்தனர். ட்ரோன் சத்தத்தில் யானை மிரண்டு புளியந்தோப்பில் இருந்து வெளியே வந்ததது. அத்துடன் வந்த வேகத்தில் கூடலூர் செல்லும் வழியில் உள்ள காந்திநகர் பகுதிக்கு அருகே உள்ள வாழை தோப்பிற்குள் சென்றது. அங்கேயே தொடர்ந்து யானை முகாமிட்டிருக்கிறது.

அரிக்கொம்பன் யானையை பிடிக்க முயற்சி செய்து வரும் வேலையில் ஏற்பட்ட இடையூறு காரணமாக யானை மிரண்டு ஓடிவிட்டது. மீண்டும் அதனை பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவர போலீசார் மற்றும்வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதனிடையே கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் ,அதை மீறி யானையை பார்க்கும் ஆசையில் வந்த 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் தொடர்ந்து ட்ரோன் பறக்கவிட்ட யூடியூபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications