Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 4% வட்டியில் 10 லட்சம் கடன்.. தமிழக அரசு வழங்கும் கடன் உதவிகள்.. தேனி கலெக்டர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

தேனி: சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் கடனுதவி திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார். தனிநபர் கடன் திட்டத்தில், 6 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும். தனிநபருக்கான மற்றொரு கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியிலும் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, தனிநபர் கடன் திட்டங்கள், கைவினை கலைஞர்கள் கடன் திட்டங்கள், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டங்கள், மாணவ-மாணவிகளுக்கான கல்விக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

loan Muslim

தனிநபர் கடன் திட்டத்தில், 6 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தனிநபருக்கான மற்றொரு கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியிலும் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கைவினை கலைஞர்களுக்கான மற்றொரு கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 6 சதவீதம் வட்டியிலும், பெண்களுக்கு 5 சதவீத வட்டியிலும் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். சுயஉதவிக்குழுவினருக்கான கடன் திட்டத்தில் 7 சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மற்றொரு திட்டத்தில் சுயஉதவிக்குழுவை சேர்ந்த ஆண்களுக்கு 10 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 8 சதவீத வட்டியிலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படும்.

தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரையும், வெளிநாடுகளில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.30 லட்சம் வரையும் கல்விக்கடன் வழங்கப்படும். மற்றொரு திட்டத்தில், மாணவர்களுக்கு 8 சதவீத வட்டியிலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியிலும் ரூ.20 லட்சம் வரையும், வெளிநாடுகளில் கல்வி பயில்வோருக்கு ரூ.30 லட்சம் வரையும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

எனவே தேனி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள், மாணவ-மாணவிகள் இந்த கடனுதவி திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய சான்றுகளை இணைத்து மேற்காணும் இடங்களில் சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+