மாற்றுத்திறனாளியிடம் இப்படியா செய்வீங்க.. ஊழியர்களுக்கு ஆன் ஸ்பாட்டில் டோஸ் விட்ட தேனி கலெக்டர்
தேனி: நடக்க முடியாத மாற்றுத்திறனாளி மகனுக்கு சக்கர நாற்காலி கேட்டு பெண் கொடுத்த மனுவில் இருந்த கோரிக்கையை மாற்றுத்திறனாளி துறை ஊழியர்கள் திருத்தம் செய்தனர். இதனை கேள்விப்பட்டு, ஆன் ஸ்பாட்டில் அவர்களை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கண்டித்தார். அத்துடன் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு வண்டி மற்றும் உதவிகளை வழங்கவும் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் பொதுமக்கள் குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். அந்த முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சியர்கள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

அதன்படியே தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமையான நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தேனி அருகே உள்ள குன்னூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்த மேரி என்பவர் தனது 17 வயது மகன் சுதீஸ் உடன் பங்கேற்றார்.
மேரியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2-வது மகனை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். மூத்த மகனுக்கு தலையில் ஒரு கட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவனுக்கு கால்கள் செயல் இழந்து நடக்க முடியாமல் போனார்.
மகனை பராமரிக்க சக்கர நாற்காலி பொருத்திய வண்டி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார் தாய் மேரி. அதற்காக கலெக்டரிம் மனு கொடுக்க விரும்பினார். மகனை ஒரு ஆட்டோவில் அழைத்து வந்ததுடன், அவரை ஆட்டோவில் இருந்து இறக்கி இடுப்பில் தூக்கிக்கொண்டு மனுக்கள் பதிவு செய்யும் இடத்துக்கு வந்தார்.

கலெக்டர் ஆபிஸில் நுழையும் போதே மேரி தனது கையில் ஒரு மனு வைத்திருந்தார். அதில், தனது மகனுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அடையாள அட்டை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது மகனை வைத்துக்கொண்டு செல்லும் வண்டி (சக்கர நாற்காலி) வேண்டும் என்றும் வேண்டுகோளாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி மகனை தூக்கியபடி இருந்த தாயை பார்த்ததும் அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஊழியர்கள் 2 பேர் அவர்களின் அந்த மனுவை வாங்கி படித்து பார்த்தனர். அந்த மனுவை அவர்கள் உடனடியாக திருத்தம் செய்தனர்.
அதில், வண்டி, அடையாள அட்டை தொடர்பான வாசகங்களை அழித்து விட்டு மருத்துவ சிகிச்சை வேண்டி என்று திருத்தம் செய்தார்களாம். அந்த மனுவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளியின் தாய் மேரி, அந்த மனுவை கலெக்டர் ஷஜீவனாவிடம் கொடுத்தார்.

கலெக்டர் என்ன வேண்டும் என்று விசாரித்த போது, தனது மகனுக்கு சக்கர நாற்காலி வண்டி வழங்குமாறு கூறியதோடு, மனுவை மாற்றுத்திறனாளி ஊழியர்கள் திருத்தியது குறித்தும் தெரிவித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஊழியர் ஒருவரை அழைத்து கலெக்டர் ஆன் ஸ்பாட்டில் கண்டித்தார்.
பின்னர் அந்த மனுவில் அவருக்கு நலத்திட்ட உதவி வழங்க பரிந்துரை செய்து கலெக்டர் எழுதி கொடுத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த கோரிக்கையை திருத்தி வேறு துறைக்கு ஊழியர்கள் பரிந்துரை செய்து எழுதிக்கொடுத்த சம்பவமும் தேனி கலெக்டர் அதற்காக டோஸ்விட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications