மாணவி என்றும் பாராமல்.. ஆசிரியை செய்த காரியம்.. ஒரு குடும்பமே சிதறிபோயிடுச்சே.. பரிதாபம்
3 மாத குழந்தையை விட்டுவிட்டு, மாணவியுடன் ஓடிய டீச்சரை போலீசார் மீட்டனர்
தேனி: ஆசிரியையான தன் மனைவியின் நடவடிக்கைகளிலும் பேச்சிலும், நாளுக்கு நாள் மாற்றங்கள் தென்படவும், அது சந்தேக சூறாவளியாக வெடித்து கிளம்பியது.. இறுதியில் ஒரு குடும்பம் சிதைந்துபோகும் அளவுக்கு விவகாரம் சென்ற நிலையில், போலீசார் இந்த விஷயத்தில் தலையிட்டு, மிகுந்த சிரமத்துக்கிடையில், பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்துள்ளனர்.. என்ன நடந்தது தேனியில்?
நிஜவாழ்க்கையில் உள்ளதுதான் சினிமாவில் பிரதிபலிப்பதாக சொல்வார்கள்.. ஆனால், சினிமாவையே மிஞ்சும் அளவுக்கும் அளவுக்கு பரபரப்பு ட்விஸ்ட்கள் அடங்கிய சம்பவம்தான் இது.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை நகராட்சி, மதுரை சாலை பகுதியில் நடந்துள்ளது.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் பொதுமக்கள் மீண்டு வெளியே வரவில்லை.

ஹெல்த்
இங்கு சுரேஷ் என்பவர் வசித்து வந்தார்.. இவரது மனைவி பெயர் பழனியம்மா... இவர்களுக்கு ஷாலினி என்கிற மகள் உள்ளார்... இவர், பெரியகுளம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிப்ளமோ ஹெல்த் கேர் பாட பிரிவில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் டீச்சராக வேலை பார்ப்பவர் தீபா.. கைலாசப்பட்டியை சேர்ந்த முருகன்- கோகிலவாணியின் தம்பதியின் மகள் ஆவார்.. தீபாவுக்கு கல்யாணமாகிவிட்டது.. கணவர் பெயர் முத்துப்பாண்டி.. இவர்களுக்கு 3 மாதம் கைக்குழந்தை உள்ளது..

லெஸ்பியன்
இந்நிலையில் ஒரே காலேஜ் என்பதால் டீச்சர் தீபாவுக்கும், மாணவி ஷாலினிக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது... ஒருகட்டத்தில் ஷாலினியை பிரிந்து தீபாவால் இருக்க முடியவில்லை.. அதனால், ஷாலினியை ஆசை வார்த்தை கூறி கைலாசப்பட்டியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் தீபா... பிறகு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, ஷாலினியை ஆணாக மாற்றினார்.. அவரை சலூனுக்கு அழைத்து சென்று, ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல் மாற்றினார்.. சிபு என்று பெயரிட்டு, முழுக்க முழுக்க ஆணின் உருவம் போலவே மாற்றினார்..

ஒரேவீடு
இருவரும் ஒரேவீட்டில் கணவன், மனைவியாகவே வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.. இந்த நிலையில் ஷாலினியை, தன்னுடைய தம்பி ஆனந்த் என்பவருக்கு கல்யாணம் செய்துவைத்துவிடலாம் என்று தன்னுடைய அம்மாவிடம் சொன்னார்.. இதற்கு முதலில் அவர் மறுத்தாலும், பேசிப்பேசியே சம்மதிக்க வைத்துவிட்டார் தீபா.. தீபாவின் தம்பி ஆனந்த், கேரளாவில் வேலை பார்க்கிறார்.. சமீபத்தில் அவர் விடுமுறைக்கு கைலாசப்பட்டி வந்துள்ளார்... அப்போது அவரிடம் திருமண பேச்சை எடுத்துள்ளார் தீபா.. பிறகு ஷாலினியையும், ஆனந்த்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

யார் ஜாடை
ஷாலினியை ஆனந்துக்கும் பிடித்து போய்விட்டது.. திருமணத்துக்கு சம்மதம் சொல்லிய ஆனந்த, தன்னுடைய விடுமுறை முடிந்ததும் மறுபடியும் கேரளாவுக்கே வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், தீபாவின் நடவடிக்கைகளில் கணவர் முத்துபாண்டிக்கு சந்தேகம் ஏற்பட துவங்கியது.. எந்நேரமும் சிபுவிடம் தன்னுடைய மனைவி ஒட்டிக் கொண்டே இருப்பதையும், ஒரே ரூமிலேயே இருவரும் உறவாடி கொண்டிருப்பதையும் பார்த்து முத்துப்பாண்டிக்கு எரிச்சலானது.. இந்த சந்தேகம் உச்சக்கட்டத்துக்கு சென்றதையடுத்து, தனக்கு பிறந்திருக்கும் குழந்தை, தன்னை போல இல்லையே, அது சிபு ஜாடையில் இருப்பதாகவும் நினைக்கும் அளவுக்கு அந்த சந்தேகம் கிளம்பியது.

சிபு ஷாலினி
ஷாலினி என்ற சிபு, ஆணாக மாறிவிட்டதால் தீபாவிற்கு பிறந்திருக்கும் குழந்தை ஷாலினி என்ற சிபுவிற்குதான் பிறந்துள்ளதாக கூறி பிரச்சனையை கிளப்பினார்.. இது முத்துப்பாண்டி - தீபா தம்பதியிடையே தகராறாக அடிக்கடி வெடித்து கிளம்பியது. இந்த ரணகளத்திலேயே, தீபாவின் தம்பி ஆனந்திற்கும், ஷாலினி என்கின்ற சிபுவிற்கும் கல்யாணம் நடந்து முடிந்துள்ளது.. இப்போது விஷயம் என்னவென்றால், ஷாலினியுடன் அதாவது சிபுவுடன் ஆனந்த் நெருக்கமாக பழகி வருவதை பார்த்த தீபாவுக்கு கடுப்பானது.. அதனால் தம்பதியை ஒன்றுசேரவிடாமல் தடுத்து வந்துள்ளார்...

தீபா + ஷாலினி
இதை கவனித்த ஆனந்துக்கு, தன்னுடைய அக்கா மீது சந்தேகம் திரும்பியது.. தீபா + ஷாலினி உறவு குறித்து ஆனந்த்துக்கு சந்தேகம் வரவும், அந்த தம்பதிக்குள் தகராறு வெடித்தது. ஒருகட்டத்தில் ஷாலினி என்கின்ற சிபு, ஆனந்த்துடன் கோபித்து கொண்டு, பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு திரும்பிவிட்டார்.. ஆனால், தீபா ஷாலினியை விடுவாரா? கணவரையும், கைக்குழந்தையையும் விட்டுவிட்டு, ஷாலினி வீடு எங்கே என்று தேடி ஓடினார்.. அவரது பெரியகுளம் வீட்டை தேடி கண்டுபிடித்து அங்கேயும் வந்துவிட்டார்.. ஷாலினியை சமாதானப்படுத்தி, யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு கடத்தி சென்றுள்ளனர்..

ஆண்வேடம்
"நமக்கு யாருமே வேணாம், இங்கேயே நிம்மதியாக குடும்பம் நடத்தலாம்" என்று ஷாலினியை சமாதானம் செய்து, ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.. ஷாலினியும் சிபு என்ற ஆண் வேடத்திலேயே வேலை பார்த்து வந்துள்ளார்... இதற்கு நடுவே, தீபாவை காணவில்லை என்று பெரியகுளம் தென்கரை போலீசில் அவரது அப்பா முருகேசன் புகார் தந்தார்.... இதுதொடர்பாக போலீசாரும் டீச்சர் தீபாவை தேடி வந்தனர்.. அதேபோல, மகள் ஷாலினியை காணவில்லை என்று பெரியகுளம் போலீசில் அவரது அப்பா ரமேஷ் புகார் தந்தார்.. இது தொடர்பாக அந்த போலீசாரும் ஷாலினியை தேடிவந்தனர்..

கவுன்சிலிங்
கடைசியில் தீபாவும், ஷாலினியும் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதை பலகட்ட தேடலுக்கு பிறகுதான் கண்டுபிடித்தனர்.. இதன் பிறகு பெரியகுளம் போலீசார் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இருவருக்கும் கவுன்சிலிங் தந்து, அவரவர் அம்மா-அப்பாவுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.. ஆனால், பெற்றோருடன் கிளம்பி செல்லும்போது, தீபா சொல்கிறார், "என் பெற்றோர்களின் பிடிவாதத்தால்தான் நாங்கள் பிரிந்து செல்கிறோம். மறுபடியும் நாங்கள் கண்டிப்பாக ஒன்று சேர்ந்து வாழ்வோம்" என்று சொல்லி விட்டு போயிருக்கிறார்கள். தேனியில் இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டீச்சர்
காதலுக்கு பாலின பேதங்கள் கிடையாது என்றாலும், இந்த நவீன யுகத்திலும் பல்வேறு தரப்பினருக்கு சிக்கலுக்குரியதாக இருக்கிறது. ஆண் - பெண் காதலுக்கு எப்படி இருக்கிறதோ, அதைவிட அதிகமாக, தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்புகள் இருந்து கொண்டுதான் வருகிறது... இத்தகைய உறவுமுறைகளை நீதிமன்றங்கள் ஏற்றாலும்கூட, ஒரு பொதுச்சமூகம் மிகக் கொடூரமான கண்ணோட்டத்தில்தான் இதை கையாண்டு வருவதையும் மறுக்க முடியாது.. அதேசமயம், கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியையே இப்படி கடமை தவறி, மாணவியை தவறான சிந்தனைக்கு உட்படுத்தி, அந்த மாணவியின் எதிர்காலத்தையே நாசமாக்கியிருப்பதை எப்படி எடுத்து கொள்வது???
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications