கனடாவில் இருந்த வந்த மகன்.. தேனியில் உயிரை பறித்த சாலை விபத்து.. ஓய்வு பெற்ற எஸ்பி குடும்பம் கதறல்
தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கனடாவில் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற எஸ்பியின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து என்பது எப்போது எப்படி நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.நம்முடைய சிறிய கவனக்குறைவோ அல்லது எதிரே வருவோரின் சிறிய கவனக்குறைவோ விபத்திற்கு பெரும்பாலும் காரணமாக இருக்கிறது. சில நேரங்களில் மது போதையில் வாகனம் ஓட்டுவது அல்லது வேண்டுமென்றே அசுர வேகத்தில் செல்வது போன்றவை விபத்திற்கு காரணமாகி விடுகிறது.

10 முதல் 20 வினாடிகளில் இழக்கும் நிதானமோ அல்லது கவனக்குறைவோ தான் பெரும்பாலான விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. அந்த விபத்தால் பல கோடி பேரின் வாழ்க்கை ஒன்றும் இல்லாமல் போயிருக்கிறது. அப்படி ஒரு விபத்து தான் தேனி மாவட்டம் கூடலூரில் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் பத்து நோன்பு பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் பண்டியராஜன் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் கார்த்திக் 35 வயதாகிறது. கார்த்திக் கனடாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதம் முன்பு தான் சொந்த ஊருக்கு வந்தார். கூடலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கூடலூர், வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் நிதிஷ்குமார் (24). மின்வாரிய ஊழியர். நேற்று மாலை கார்த்திக், நிதிஷ்குமார் ஆகிய இருவரும் கூடலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கம்பத்திற்கு சென்றுள்ளார்கள். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார்.
கூடலூரில் அருகே அப்பாச்சி பண்ணை அருகே சென்றபோது, நிலை தடுமாறி எதிரே வந்த சரக்கு வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதி்ல் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். நிதிஷ்குமார் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டி வழக்குப்பதிந்து சரக்கு வாகன டிரைவரான நாகபட்டினம் கீவலூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (34) என்பவரை கைது செய்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications