தேனி அரசு ஊழியர் மகளுக்கு என்னாச்சு.. காலையில் மணக்கோலம்.. மாலையில்? மறுவீட்டுக்காக வந்த மணப்பெண்
தேனி: காலையில் திருமணம் நடந்து, மாலையில் மறுவீடு சடங்கு நடந்துள்ளது.. இதனால் மணக்கோலத்தில் வந்த மகளை பார்த்ததுமே ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.. அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தேனியுமே கதிகலங்கிவிட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது கதிர்நரசிங்கபுரம்.. இங்கு வசித்து வருபவர் பரமேஸ்வரன். இவர், தேனி அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.. இவருடைய மகள் கவுசல்யா என்ற சவுமியாவுக்கு 24 வயதாகிறது.

ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். சவுமியாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவருடன் திருமணம் நிச்சயமானது.. பாலாஜிக்கு 28 வயதாகிறது. பெங்களூருவில் ஒரு IT கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்துக்காக சில நாட்களுக்கு முன்பே லீவு எடுத்துக் கொண்டு, பாலாஜி சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.
நேற்று முன்தினம் காலை, கம்பம் புதுப்பட்டியில் உள்ள பாலாஜியின் வீட்டில் பாலாஜிக்கும், சவுமியாவுக்கும் திருமணம் நடந்தது. பிறகு மாலையில் மறுவீடு நிகழ்ச்சிக்காக, கதிர்நரசிங்கபுரத்தில் உள்ள பரமேஸ்வரன் வீட்டுக்கு புதுமண தம்பதி சென்றார்கள்.
மறுவீடு சடங்கு: மகளை பார்த்ததுமே, பரமேஸ்வரன் ஆனந்த கண்ணீர்விட்டு வரவேற்றார். பிறகு, மறுவீடு சடங்குகளுக்கான ஏற்பாடுகளை பரமேஸ்வரன் குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தனர். அப்போது களைப்பாக இருப்பதால், முகம் கழுவிவிட்டு வருவதாக சொல்லிவிட்டு, தன்னுடைய பெட்ரூமுக்கு சென்றார் சவுமியா.. கதவையும் உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் சவுமியா ரூமை விட்டு வெளியே வராததால், சந்தேகம் அடைந்த பாலாஜி மற்றும் உறவினர்கள் கதவை தட்டினார்கள்.. ஆனால் சவுமியா கதவை திறக்கவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள், பெட்ரூம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்..
கொக்கி சேலை: அப்போது சவுமியா, பெட்ரூமிலேயே கொக்கியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அலறி துடித்தார்கள்.. இதுகுறித்து ராஜதானி போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுமியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணத்தன்று சவுமியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.. எனவே இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. காலையில் திருமணம் நடந்து, மாலையில் மணமகள் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
கன்னியாஸ்திரி: கன்னியாஸ்திரியாக போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம் சவுமியா.. அதனால் திருமணத்தில் விருப்பம் இன்றியே காணப்பட்டதாக, அவரது உறவினர்கள் சொல்கிறார்கள்.
சவுமியாவுக்கு 24 வயதாகிறது.. பெரியகுளம் கல்லூரியில் பிஎட்.முடித்துள்ளார். திருமணம் நிச்சயமானதிலிருந்தே, சவுமியா திருமணத்தில் ஈடுபாடு இன்றியே இருந்து வந்தாராம்.. கல்யாணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று குடும்பத்தினர் நினைத்தார்களாம். ஆனால், இப்படியொரு துயர முடிவை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கலங்கி கூறுகிறார்கள். எனினும், சவுமியாவின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை போலீசார் கண்டறிந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications