Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் 2 நாளும் ஜாலி.. அரசு ஊழியர்களுக்கும் தித்திப்பு நியூஸ்... நம்ம வீரபாண்டி கோயில்ல விசேஷமுங்க

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழாவானது, சித்திரை கடைசி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைகாசி முதல் செவ்வாய்க்கிழமைவரை நடக்கும் வைபவமாகும்.. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்வார்கள். தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருவிழா தற்போது துவங்கியிருக்கிறது. இதுகுறித்து மகிழ்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

மதுரையை போன்றே தேனி வீரபாண்டி கோவில் திருவிழாவும் மிகவும் பிரபலமானது... வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில்... இந்த கோயில் திருவிழாதான் உலக புகழ் பெற்றதாக விளங்கி கொண்டிருக்கிறது.

Theni Government Employees Veerapandi Temple Festival

கொடியேற்றத்துடன் ஆரம்பம்

இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 7 நாட்கள் இரவும் பகலாக நடைபெறும்.. இந்த கோவிலுக்கு பக்தர்கள் காவடி, அக்னி சட்டி, பூ மிதித்தல் போன்ற வழிகளில் அம்மனுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கமாகும்..

தேனி மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாவாக இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மற்றும் பக்கத்து மாநிலம் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் தேனிக்கு வருகை தருவார்கள்.. அதாவது, திருவிழா நாளில் தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் இந்த கோயிலுக்கு திரண்டு வருவார்கள்..

திருவிழா சிறப்புகள்

வழக்கமாக, கோயில் திருவிழாவிற்கான திருக்கம்பம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அம்பாள் கோயில் வீட்டிலிருந்து கரகத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்படுவது வழக்கமாகும்.

ஒரு வாரம் திருவிழா நடப்பதால், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும். அந்தவகையில், இந்த ஆண்டும் ராட்டினங்கள் அமைப்பதற்கான பொது ஏலம் அறநிலையத்துறை சார்பில் சமீபத்தில் நடந்தது. வீரபாண்டி ராட்டினத்தை தேனியைச் சேர்ந்த விஜயராஜன் என்பவர் ரூ.3.06 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தார்.. வீரபாண்டி கோயில் ராட்டினம் கடந்த ஆண்டு ரூ.2.55 கோடிக்கு ஏலம் போனது. அதாவது, கடந்த வருடத்தைவிட, ரூ.51 லட்சம் கூடுதல் தொகை கொடுத்து ராட்டினம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆரம்பம்

இந்நிலையில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று மே 6 முதல் வரும் 13 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளதால், தேனி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் மே 9 ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இதனால் மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, தேனி மாவட்டம் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு திருவிழா வரும் மே 12ம் தேதியன்று நடைபெற உள்ளது

தேனிக்கு 2 நாட்கள் விடுமுறை

இந்த திருவிழாவை முன்னிட்டும் வரும் மே 12 ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 2 விடுமுறை தினங்களை ஈடுசெய்யும் வகையில் வரும் மே 17 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் முழு வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் செய்திக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாள் விடுமுறையானது, தேனி மாவட்ட மக்களுக்கு குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+