தேனியில் விசேஷம்.. இன்று கண்ணகி சித்திரை திருவிழா.. கூடலூரில் குவிந்த பக்தர்கள்.. உள்ளூர் விடுமுறை
தேனி: மதுரையை போன்றே தேனி வீரபாண்டி கோயில் திருவிழாவும் மிகவும் பிரபலமாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல, மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு திருவிழாவும் பிரசித்தி பெற்றதாகும்.. இந்த திருவிழாவிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.. அந்தவகையில், இன்றைய தினம் தேனி திருவிழாவை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ளார்.
மதுரையை போன்றே இந்த தேனி வீரபாண்டி கோவில் திருவிழாவும், தென்மாவட்டங்களில் புகழ்பெற்றது.. இந்த வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில், திருவிழாவானது, சித்திரை கடைசி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைகாசி முதல் செவ்வாய்க்கிழமைவரை நடக்கும் விழாவாகும்.

பிரசித்தி பெற்ற திருவிழா
தேனி மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாவாக இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு வட்டங்கள், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் திரண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்திவிட்டு செல்வார்கள்.
இந்த திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ச்சியாக ஒரு வாரம் நடத்துவார்கள்.. காவடி, அக்னி சட்டி, பூ மிதித்தல் போன்ற வழிகளில் பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள்.
கோயில் கரகம் ஊர்வலம்
திருவிழாவிற்கான திருக்கம்பம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அம்பாள் கோயில் வீட்டிலிருந்து கரகத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவருவார்கள்.. ஒரு வாரம் திருவிழா நடப்பதால், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருக்கும்..
அந்தவகையில், இந்த வருடம் தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 6ம் தேதி தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதம் 16-ம் தேதி திருக்கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.
முழு நிலவு திருவிழா
அதேபோல, தேனி மாவட்டம் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு திருவிழா மே 12ம் தேதி, அதாவது இன்றைய தினம் நடைபெற உள்ளது.. இந்த திருவிழாவை முன்னிட்டும் இன்றை, தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே வீரபாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டும் கடந்த 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுபோல இன்றைய தினமும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த 2 விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் வரும் மே 17 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் முழு வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாள் விடுமுறையானது, தேனி மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications