தேனியில் தேங்காய் உரிக்கும் குணசேகரன்! முல்லைப் பெரியாறு ஆற்றுக்கு நவீன்குமாரை அழைத்து.. நம்ப முடியல
தேனி: தேனியில் நெருங்கிய நண்பராலேயே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.. கொடூரமாக கொலை செய்து, சடலத்தை ஆற்றில் வீசியதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது.. இந்நிலையில், இந்த வழக்கில் பல்வேறு பகீர் தகவல்கள் தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்து, தேனி மாவட்டத்தையே பதற வைத்துள்ளது.
தேனி அருகே உப்புகோட்டை பகுதியை சேர்ந்த தம்பதி அழகர் சாமி - ஜெயலட்சுமி.. இவர்களுடைய மகன் நவீன் குமார்.. 25 வயதான நவீன், ஒரு பட்டதாரி ஆவார்.

தன்னுடைய பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.. கடந்த 6ம் தேதி நண்பருடன் வெளியே சென்ற நவீன், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் பல இடங்களில் மகனை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால், கடந்த 8ம் தேதி வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்கள்..
தேனி நவீன்குமார்
இதையடுத்து, சம்பவத்தன்று நவீன்குமாரை அழைத்து சென்ற அவருடைய நண்பரை போலீசார் விசாரித்தனர்.. அப்போது நவீன் குமாரும் அந்த நபரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது, போதையில் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக, நவீன் குமாரை கொன்று ஆற்றில் வீசியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் தந்தார்.
இதையடுத்து, தீயணைப்பு துறையின் உதவியுடன் முல்லைப் பெரியாற்றில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சடலம் கிடைக்கவில்லை.
முல்லைப் பெரியாறு ஆறு
இதனால் ஆத்திரமுற்ற நவீனின் குடும்பத்தினர், மகனின் உடலை மீட்டு தரவேண்டும் என்றும், மகனை கொலை செய்த நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எனவும் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தேனி டிஎஸ்பி முத்துக்குமார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களை சமாதானம் செய்து, உடலை கண்டுபிடித்து தருவதாகவும், கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதனிடையே, சுமார் 4 மணி நேர தீவிர தேடுதலுக்கு பிறகு உப்புக்கோட்டை கருப்புசாமி கோயில் அருகே ஆற்றங்கரையில் நவீன் குமாரின் உடலை கண்டெடுத்தனர்..
உடலைக் கண்ட பொதுமக்களும் உறவினர்களும் கதறி அழுதது காண்போரை கலங்கடிக்க செய்தது. பிறகு சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தேங்காய் உரிக்கும் தொழிலாளி
இந்நிலையில் நவீன்குமார் யார்? அவரை ஏன் நண்பர்கள் கொன்றார்கள்? மது அருந்தும்போது என்ன தகராறு ஏற்பட்டது என்பது குறித்த பகீர் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
நவீன்குமாரின் அப்பா அழகர்சாமி, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராம்.. சில வருடங்களுக்கு முன்புதான் உயிரிழந்துள்ளார்.. இதனால் நவீன்குமார் வேலைக்கு செல்லும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.
தட்டி தூக்கிய போலீஸ்
சம்பவத்தன்று நவீன்குமார், அதே பகுதியை சேர்ந்த குணா என்ற குணசேகரன் என்பவருடன் பைக்கில் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குணாவை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார்.. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனினும் போலீசார், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு குணசேகரனை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.. தேங்காய் உரிக்கும் வேலையை செய்து வருபவராம் குணசேகரன். திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
மது அருந்தலாம்
நவீன்குமாரும், குணசேகரனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.. அடிக்கடி இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.. அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ஒன்றாக சேர்ந்து மதுஅருந்தும்போது, குணசேகரனை தரக்குறைவாக நவீன்குமார் பேசியதாக தெரிகிறது. இது குணசேகரனுக்கு ஆத்திரத்தை தந்து வந்துள்ளது.
எனினும் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், சம்பவத்தன்று மறுபடியும் நவீன்குமாரை மது அருந்தலாம் வா என்று குணசேகரன் கூப்பிட்டுள்ளார்..
3 சவரன் தங்க நகைகள்
தன்னை நம்பி வந்த நண்பனை, முல்லைப் பெரியாற்று பகுதிக்கு அழைத்து சென்ற குணசேகரன், நவீன்குமாரை அரிவாளாலேயே வெட்டி கொன்றுள்ளார்.. மேலும், நவீன்குமாரிடமிருந்த 3 சவரன் தங்க நகை, ஐபோனை எடுத்துக் கொண்டு, சடலத்தையும் ஆற்றில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.. இவ்வளவையும் வாக்குமூலமாக குணசேகரன் போலீசில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காணாமல்போன வழக்கை, கொலை வழக்காக மாற்றிய வீரபாண்டி போலீசார் குணசேகரனை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.. எனினும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா? என்றும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications